செய்திகள்

எதிர்க்கட்சிகள் கூட்டம்: ஸ்டாலின் சிறப்பு விமானம் மூலம் பாட்னா பயணம்

சென்னை, ஜூன்.22-–

எதிர்க்கட்சிகள் கூட்டம் பாட்னாவில் நாளை நடக்கிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விமானம் மூலம் இன்று மாலை பாட்னாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பாட்னாவில் நாளை (வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இதற்காக அவர், இன்று (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் பாட்னா செல்கிறார். கூட்டத்தில் பங்கேற்ற பின்பு மீண்டும் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு பாட்னாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *