செய்திகள்

எதிர்க்கட்சிகளின் தூணாக மம்தா: காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வி

டெல்லி, மார்ச் 30–

எதிர்க்கட்சிகளின் தூணாக மம்தா இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணி அமைப்பதர்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் பொருட்டு, பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் எதிர்கட்சித்த தலைவர்களுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில், “நமது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை பா.ஜ.க தொடர்ந்து தாக்கி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் ஒரே நோக்கத்துடன் மத்திய அமைப்பை தவறாக பயன்படுத்தி வரும் பா.ஜ.க நோக்கத்தினை எதிர்த்து நாம் போராட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் சிங்வி மம்தாவை செயலை ஆதரித்து இன்று டுவீட் செய்துள்ளார்.

மம்தா தூண்

அந்த டுவிட்டர் பதிவில், “பா.ஜ.க அல்லாத எதிர்கூட்டணி என்பது காலத்தின் தேவை. மம்தா அதற்கொரு தூண். 2024 -ம் ஆண்டில் மாநிலம் வாரியான வாக்குப் பிரிவினையைத் தடுக்க ஒவ்வொரு கட்சியும் ஒன்றிணைய வேண்டும். பா.ஜ.கவின் சிறந்த வெற்றியானது, மக்கள் வாக்குகளில் 39 சதவிகிதத்தைக் கூட தாண்டவே இல்லை. பா.ஜ.க அல்லாத இடத்தை ஒன்றிணைக்க, மம்தா மற்றும் மற்ற அனைவரும் தங்களது முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அபிஷேக் சிங்வியின் கருத்து மாநில தலைவர்களின் கருத்து அல்ல எனக் கூறிய மேற்கு வாங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி, மம்தா பானர்ஜி சில சமயங்களில் பா.ஜ.கவுக்கு எதிராகவும், சில சமயங்களில் பாஜக, காங்கிரஸுக்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும் என்று கூறுகிறார். அவரின் கருத்து மாறிக்கொண்டே இருக்கும் என கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.