செய்திகள்

எதிரி நாட்டு பீரங்கியை தாக்கி அழிக்கும் இந்திய ஏவுகணை சோதனை வெற்றி

Spread the love

ஐதராபாத், செப். 12

ராணுவ டாங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை மத்திய அரசின் டிஆர்டிஓ நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

போரின் போதும் எதிரி நாட்டுடனான சண்டையின் போதும் ராணுவ டாங்கிகளை தகர்ப்பதற்காக கையால் தூக்கி சென்று இலக்கை தாக்கி அழிக்க கூடிய ஏவுகணைகளை பயன்படுத்துவது வழக்கம். இதை வைத்து நாம் சரியாக குறி வைத்து தாக்க வேண்டும்.

அதன்படி இந்த ஏவுகணையை ஏவும் வீரர்கள்தான் தாக்க வேண்டிய புள்ளிகளை குறி வைப்பார்கள். இதில் தானாக குறி வைக்க முடியாது. இதற்கு பதிலாக தானாக குறி வைத்து தாக்கும் இந்த ஏவுகணைகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டு வருகிறது. டிஆர்டிஓ மூலம் இது உருவாக்கப்பட்டு வருகிறது. இது தானாக தாக்க வேண்டிய புள்ளிகளை குறி வைத்து எங்கிருந்து தாக்கினாலும் துல்லியமாக தாக்கி அழிக்க கூடிய சக்தி கொண்டது.

இது 2.5 கிமீ தூரம் வரை சென்று தாக்கி அழிக்கக்கூடிய சக்தி கொண்டது ஆகும். இதன் 2 தலைமுறை ஏவுகணைகள் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் இதன் மூன்றாவது தலைமுறை ஏவுகணை இன்று ஆந்திராவில் உள்ள கர்நூல் பகுதியில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றி அடைந்துள்ளது. மிக துல்லியமாக குறிக்கப்பட்ட இடத்தை இந்த ஏவுகணை தாக்கியுள்ளது.

இந்த ஏவுகணையை வைத்து மூன்றாவது முறையாக இப்படி சோதனை செய்துள்ளனர். கடந்த 2 முறை நடந்த சோதனையிலும் இது வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *