செய்திகள்

எண்ணூர் விரைவு சாலையில் 654 எல்இடி விளக்குகள் அமைக்கும் பணி

Spread the love

திருவொற்றியூர் ஜூலை.18

எண்ணூர் விரைவுச்சாலையில் 654 எல்.இ.டி மின்விளக்கு அமைக்கும் பணியை முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தொடங்கி வைத்தார்.

எண்ணூர் 4 வழி விரைவுச்சாலையில் கன்டெய்னர் லாரிகள் அதிகம் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. அந்தப் பகுதியில் மின் விளக்கு இல்லாததே இதற்கு காரணம் என பொதுமக்களால் கூறப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ ‌ கே .குப்பன் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும் தமிழக முதல்வருக்கும் சென்னை மாநகராட்சிக்கும் விளக்குகள் அமைத்து தரக் கோரி மனு அளித்தார். தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும் பொதுமக்கள் நலன் கருதி சென்னை மாநகராட்சி சார்பில் ரூபாய் 2.72 கோடியில் 327 மின்கம்பங்களில் 654 எல்இடி விளக்குகள் அமைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மின் கம்பங்கள் அமைக்கும் பணி இன்று பட்டினத்தார் கோயில் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் தலைமையில் நடந்தது மின் விளக்குகள் அமைக்க பூமி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பொது நல ஆர்வலர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *