திருவெற்றியூர் ஆக.18–
எண்ணூர் தொழிற்சாலைக்கு அமோனியா கொண்டுவரும் கப்பலை படகில் சென்று முற்றுகையிட மீனவ கிராமங்கள் முடிவு செய்துள்ளனர்.
எண்ணூரில் தனியார் தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பலில் இருந்து கொண்டுவரும் அம்மோனியா குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக கடலில் அமோனிய வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் பெரிய குப்பம் சின்ன குப்பம் பகுதியில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் 53 பேர் அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது சம்பந்தமாக மீனவர் கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதை அடுத்து தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டு உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது அமோனிய வாயு வெளியான தொழிற்சாலை திறக்கப்பட உள்ளதாக செய்தி பரவியது. திருவொற்றியூர் குப்பம், திருச்சினாங்குப்பம், ஒண்டி குப்பம், நல்ல தண்ணீர் ஓடை குப்பம், பலகை தொட்டிக்குப்பம், காசி விசாலாட்சி குப்பம், காசி கோயில் குப்பம், இந்திரா காந்திக்குப்பம், எர்ணாவூர் குப்பம், லட்சுமிபுரம் புதுநகர் குப்பம் ஆகிய கிராம மக்கள் இணைந்து திருவெற்றியூர் குப்பம் மீனவர் பொதுநல சபை என்ற அமைப்பின் மூலம் இன்று ஆலோசனைக் கூட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. குப்பன் தலைமையில் நடத்தினர். இக்கூட்டத்தில் பல்வேறு கிராம மக்கள் தொழிற்சாலை மீண்டும் திறக்க கூடாது என பேசினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆலை திறப்பா?
எண்ணூரில் உள்ள கோர மண்டல் தொழிற்சாலையில் சமீபத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பொதுமக்களுக்கு கடுமையான உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. எண்ணூர் பகுதியில் உள்ள 33 கிராம பொதுமக்கள் ஒருங்கிணைந்து சுமார் 90 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தியதால் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்திரவின் பேரில் தமிழ்நாடு அரசு கோரமண்டல் தொழிற்சாலையை மூட உத்தரவிட்டது . தற்போது மீண்டும் தொழிற்சாலை திறக்கப்பட உள்ளதாக ஊடகங்களில் வாயிலாக அறிகிறோம். இத்தொழிற்சாலை அமோனியா வாயு உள்ளிட்ட விஷ வாயுக்களை வெளியேற்றி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததால் இந்த உரத் தொழிற்ச்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும்.
கப்பல் முற்றுகை
பொதுமக்கள் கோரிக்கையை மீறி தொழிற்சாலையை திறக்க முற்பட்டால் தொழிற்சாலைக்கு அருகே கடலில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் தொழிற்சாலைக்கு கொண்டு வரும் அமோனியா கப்பலை முற்றுகையிட அனைத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து படகில் சென்று தடுத்து நிறுத்தி போராடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு, தொழிற்சாலையை நிரந்தரமாக மூடி பொதுமக்களை காப்பாற்ற வேண்டும். மீண்டும் தொழிற்சாலை திறக்க முயற்சிகள் மேற்கொண்டால் அனைத்து மீனவர் கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு தொழிற்சாலை நுழைவாயில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்துவது, உயிர்களை காப்பாற்றிக் கொள்ளவும் நமது வாழ்வாதாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும் அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து கோரமண்டல் தொழிற்சாலை மீண்டும் திறக்காமல் நிரந்தரமாக மூட உறுதியுடன் போராடுவது,
அம்மோனியா உள்ளிட்ட ரசாயன பொருட்களை கடலில் கப்பலை நிறுத்தி தொழிற்சாலைக்கு அமோனியா வாயு கொண்டுவரப்படுவதால் மீன்கள் இனப்பெருக்கம் முற்றிலும் நின்று விட்டது. மீனவர்கள் மீன்பிடி தொழில் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
எனவே எண்ணூர் பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் ரசாயனம் கலந்து இருக்குமோ என்று பொதுமக்கள் வாங்க அச்சப்படுகின்றனர். எனவே கோரமண்டல் தொழிற்சாலைக்காக கடலில் பொருத்தியுள்ள குழாயை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
போபாலில் ரசாயன தொழிற்சாலையில் இருந்து வெளியேறி விஷவாயுத்தாக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்த மிகப்பெரிய சோக சம்பவத்தை போல் இந்த கோரமண்டல் தொழிற்சாலையால் திருவொற்றியூர் தொகுதியில் ஏற்படாத வண்ணம் இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக தமிழ்நாடு அரசு மூட வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கிறது என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
வாழவைத்த தெய்வம். பெரியவர்கள் அருமை என்பது தாமதமாக த்தான் பேரன் புரிந்து கொண்டான். அருமையான பதிவு.
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து.