சென்னை, நவ. 1–
எண்ணூர் காமராஜர் நகரில் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குடிசை வீடுகள் எரிந்த நாசமாயின.
எண்ணூர் மார்க்கெட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் சாகுல் ஹமீதுக்கு காமராஜர் நகர் பகுதியில் சொந்தமான வீட்டின் மொட்டை மாடியில் குடிசை வீடுகளை அமைத்து, அவரது சகோதரர்கள் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். நேற்று அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தபோது எதிர்பாராத விதமாக குடிசை மீது தீப்பொறிபட்டுள்ளது.இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எண்ணூர் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர்கள் அங்கு தீயைக் கட்டுக்குள் கொண்டுவர கடுமையாகப் போராடினர். இதில் 4 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்து குறித்து எண்ணூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.