சினிமா

‘எட்டு தோட்டாக்கள்’ ஹீரோவுடன் சினிமாவுக்குள் நுழையும் ஷ்யாம் மனோகரன்!

சென்னை, ஏப். 20-

உலக சினிமாவாக இருக்கட்டும் அல்லது உள்ளூர் சினிமாவாக இருக்கட்டும் கதையில் தன்னை பொருத்திக்கொண்டு மிளிர்கிற ஹீரோவின் படங்கள் அரிதாகவே இருந்து வருகிறது. ஆனால் அறிமுகமான சில படங்களுக்குள்ளாகவே கதைளுக்குள் தன்னை பொருத்தி கொண்டு ஒரு சிறப்பான நடிகராக மிளிர்ந்துள்ளார் நடிகர் வெற்றி (‘எட்டு தோட்டாக்கள்’ புகழ்) விளம்பர படங்களை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் ஷ்யாம் மனோகரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். தமிழில் முதல் ரோட் மிஸ்டரி திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இறைவி மற்றும் படங்களை விநியோகம் செய்த பிக்சர் பாக்ஸ் கம்பெனி தயாரிக்கின்றது. ‘‘இறைவி கருப்பன் என தரமான படங்களை விநியோகம் செய்த, இளமையும் திறமையும் வாய்ந்த தயாரிப்பாளர் அலெக்சாண்டரை அணுகினேன். முழு திரைக்கதையை அவரிடம் விவரித்தவுடனேயே படத்தை தயாரிக்க ஒப்புகொண்டு சம்மதம் தெரிவித்தார்.

இப்படத்தில் முதன்மை பாத்திரத்திற்கு என்னுடைய முதல் தேர்வாக இருந்தவர் நடிகர் வெற்றி. தரமான படங்களில் பரிசோதனை பாத்திரங்களில் நடித்து, தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபித்தவர். அவருக்கும் திரைக்கதை வெகுவாக பிடித்திருந்தது. உடனடியாக நடிப்பதற்கு ஒப்புகொண்டார். இளமையும் திறமையும் வாய்ந்த நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என் முதல் படத்திற்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி’’ என்று இயக்குநர் ஷ்யாம் மனோகரன் கூறினார்.

புத்தம் புதிதான கதையாக நாம் இதுவரை பார்த்திராத படமாக இதன் திரைக்கதை இருந்தது. மிஸ்டரி படங்களில் எப்போதும் க்ளைமாக்ஸில் தான் சீட்டின் நுனியில் வைத்திருக்கும் பகுதிகள் இருக்கும். ஆனால் ஷ்யாம் திரைக்கதையில் ஆரம்பத்தில் இருந்தே அம்மாதிரி பகுதிகள் இருப்பதை அறிந்தேன் என்றார் அலெக்சாண்டர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *