செய்திகள்

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: அன்னதானம், நிவாரண பொருட்கள்: தி.நகர் சத்தியா எம்.எல்.ஏ. வழங்கினார்

தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்:

அன்னதானம், நிவாரண பொருட்கள்: தி.நகர் சத்தியா எம்.எல்.ஏ. வழங்கினார்

 

சென்னை, மே 13–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை யொட்டி தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் தி.நகர் பி.சத்தியா எம்.எல்.ஏ. வழங்கினார்.

எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை யொட்டி ஆங்காங்கே உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அனைவரும் முககவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

எந்தவித சிரமமும் இல்லாமல் உணவு, நிவாரண பொருட்களை வரிசையாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கடந்த 45 நாட்களாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கிறார்கள். அவர்களுக்கு அரசு அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள், நிவாரண நிதி வழங்கி உள்ளது.

அண்ணா தி.மு.க.வினரும் மக்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

பிறந்த நாள் நிவாரண உதவி

நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் ஆகும். எனவே பிறந்த நாளையொட்டி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, தி.நகர் மற்றும் அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் தி.நகர் பி.சத்தியா எம்.எல்.ஏ. நிவாரண உதவிகளை வழங்கினார்.

சேப்பாக்கம் பகுதி கழகச் செயலாளர் எம்.கே.சிவா, துணை செயலாளர் எஸ்எஸ்எஸ்.ராமு, வட்டக் கழகச் செயலாளர்கள் ஜெயபால், காமேஷ் மற்றும் ஆயிரம் விளக்கு மாவட்ட அவைத் தலைவர் நுங்கை மாறன், மாவட்ட துணை செயலாளர் யு.கற்பகம், பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா நகர் என்.ஆறுமுகம், பகுதி கழக செயலாளர் நுங்கை செல்வக்குமார், பகுதி அவைத் தலைவர் எல்.சங்கர், வட்டச் செயலாளர்கள் இளையமாறன், தேனி ரமேஷ், சசிக்குமார், ஜார்ஜ், கேபிள் டிவி மாரி, பந்தல் பாபு, கே.துளசி, ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் வழக்கறிஞர் சதாசிவம், சாலைமுத்து, கபிலன், சுரேஷ், மாங்கா நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சேப்பாக்கம் தொகுதி சிந்தாதிரிப்பேட்டையில் கழக இலக்கிய அணி சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு தலா 5 கிலோ அரிசி, தலா 1 கிலோ எண்ணை, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, 5 கிலோ காய்கறிகளை தி.நகர் பி.சத்தியா எம்.எல்.ஏ. வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தென்சென்னை வடக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வி.வி.முருகன் செய்திருந்தார். பகுதி செயலாளர் எம்.கே.சிவா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

117–வது வட்ட கழக செயலாளர் (கிழக்கு), இயக்குனர் பி.இளையமாறன் ஏற்பாட்டில் அன்னதானத்தை மாவட்ட செயலாளர் தி.நகர் பி.சத்தியா எம்.எல்.ஏ. வழங்கினார்.

உடன் மாவட்ட தலைவர் நுங்கை மாறன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வரதை முத்துபரணி, பகுதி செயலாளர் நுங்கை செல்வகுமார், துணை செயலாளர் யு.கற்பகம், எல்.சங்கர், புஷ்பா நகர் ஆறுமுகம், வழக்கறிஞர் சதாசிவம், வட்ட செயலாளர்கள் பந்தல் பி.பாபு, கே.துளசி, கங்கை சசிகுமார், ஜார்ஜ், தேனை ரமேஷ், கேபிள் டி.வி.மாரி, டைல்ஸ் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *