செய்திகள்

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்: பிரதமர், ஓ.பி.எஸ், கவர்னர் வாழ்த்து

Spread the love

சென்னை, மே 12–

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 66-வது பிறந்த நாள். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி இன்று காலை தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது டிவிட்டரில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நல்ல உடல்நலத்துடன் நீண்டகாலம் மக்கள் சேவையாற்ற பிரார்த்தனை செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமது ட்விட்டர் பக்கத்தில், இன்று பிறந்தநாள் காணும், முதல்வர் அன்பு அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமி நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் பல்லாண்டு வாழ எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கானா கவர்னர்

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் அருளோடு உடல் ஆரோக்கியத்தோடு, நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் என வாழ்த்தியுள்ளார்.

பல்வேறு தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *