செய்திகள்

எடப்பாடியிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்த நிர்வாகிகள்

சென்னை, ஜூலை 14–-

தேனி மாவட்டத்தை சேர்ந்த 2 அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் நேரிலும், கடிதம் மூலமும் மன்னிப்பு கோரி, தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டி கேட்டுக்கொண்டதால் அவர்கள் கட்சி உறுப்பினர்களாக இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அண்ணா தி.மு.க.வில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த முருக்கோடை எம்.பி.ராமர், வி.அன்னப்பிரகாஷ் ஆகியோர் தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும், கடிதம் மூலமும் மன்னிப்பு கோரி, தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டி கேட்டுக்கொண்டதால் அவர்கள் கட்சி உறுப்பினர்களாக இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பல்வேறு தவறுகளுக்காக நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் அண்ணா தி.மு.க.வில் சேரலாம் என எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *