வாஷிங்டன், செப் 20- விசாவுக்கு நிறுவனம் ஆண்டுக்கு 85 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அமெரிக்கா அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவு, புதிய விசா மட்டுமின்றி, புதுப்பித்தலுக்கும் பொருந்தும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்திட இந்த திட்டத்தை டிரம்ப் அறிமுகப்படுத்த உள்ளார்.
புதிய விதிகள் படி, எச் 1 பி விசாவில் ஒருவருக்கு பணி அளிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்காக 1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் 88 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்) கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இந்தியர்கள் ஆதிக்கம்
இந்த விசாவால் அதிகம் இந்தியர்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விசாக்களில் கடந்தாண்டு 70 சதவீதம் விசாக்களை இந்திய வல்லுனர்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக எச்1 பி விசா, கிரீன்கார்டு முறையை மாற்றுவோம் என அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவார்டு லுட்னிக் கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியது குறிப்பிடத்தக்கது.
எச்1 பி விசா என்பது அமெரிக்காவின் தற்காலிக குடியுரிமை போன்றதாகும். வெளிநாடுகளில் உள்ள திறமையான பணியாளர்களை அமெரிக்காவுக்கு வரவழைத்து வேலை வாங்க இந்த விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 1990 முதல் இந்த விசா முறை நடைமுறையில் இருக்கிறது. மூன்று ஆண்டுகள் வரை இந்த விசாவின் மூலம் அமெரிக்காவில் வசிக்க முடியும். அதிகபட்சமாக விசாவை நீட்டித்து ஆறு ஆண்டுகள் வரை இந்த விசாவை வைத்துக் கொண்டு அமெரிக்காவில் இருக்க முடியும். இதற்கிடையில் அமெரிக்க குடியுரிமை
வாங்கிவிட்டால், நிரந்தரமாக அமெரிக்காவில் தங்கிக் கொள்ளலாம்.
10 மடங்கு உயர்வு
தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் மொத்தம் 5 லட்சம் பேர் எச்1-பி விசாவின் மூலம் வசிக்கிறார்கள். இவர்களில் 71 சதவீதம் அதாவது, தோராயமாக 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் ஆவார். இந்த விசாவை வைத்திருக்கும் அனைவருக்கும் விசாவுக்கான கட்டணத்தை அவர்கள் பணி செய்யும் நிறுவனங்களே முன்னர் இதற்கான வழங்கும். கட்டணம் ரூ.8.8 லட்சமாக இருந்தது. இன்று இந்த கட்டணம் ரூபாய் 88 லட்சமாக அதிகரித்திருக்கிறது. செப்டம்பர் 21-ம்தேதி முதல் அதாவது நாளை முதல் இந்த புதிய விசா கட்டண நடைமுறை அமலுக்கு வர இருக்கிறது. எனவே அமெரிக்க நிறுவனங்கள் எச்-1பி விசா வைத்திருக்கும் ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
அமெரிக்க வேலைவாய்ப்பை மக்களுக்கு அதிகரிக்கும் நோக்கிலும், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பணியாளர்கள் அமெரிக்காவுக்குள் குடியேறுவதை தவிர்க்கும் நோக்கத்திலும் இந்த கட்டண உயர்வை அமெரிக்கா அரசு அறிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. வெளிப்படையாக பார்த்தால் இது சரியானதாக இருக்கும் என்றாலும் இந்த கட்டண உயர்வு இந்தியர்களை கடுமையாக பாதிக்கும் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
இப்போதைக்கு அமெரிக்காவின் புதிய விசா கட்டணம் நடைமுறையை கார்ப்பரேட் நிறுவனங்கள் வரவேற்றிருக்கின்றன. இருந்தாலும் அந் நிறுவனங்களுக்கு இது பின்னடைவாகவே அமையும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
![]()





