செய்திகள்

ஊழியர்களுக்கு கொரோனா: கோவையில் வங்கி மூடல்

கோவை, மார்ச் 24

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள வங்கியில் பணிபுரிந்த ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த வங்கி கிளை தற்காலிகமாக மூடப்பட்டது.

தமிழத்தில் வைரஸ் பாதிப்பின் 2-வது அலை தொடங்கிவிட்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1437 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 532 பேரும், கோவையில் 146 பேரும் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா’ வங்கியில் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பீளமேடு வங்கி கிளை தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும், அவசர தேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் வங்கியின் மற்ற கிளைகளை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்களது குடும்ப உறுப்பினர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *