செய்திகள்

ஊரடங்கு மீறல்: தமிழகம் முழுவதும் ரூ. 7.10 கோடி அபராதம் வசூல்

Spread the love

சென்னை, மே 22–

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் ரூ. 7.10 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்புப் பணியாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இன்று காலை 9 மணி வரை 4 லட்சத்து 85 ஆயிரத்து 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5 லட்சத்து 16 ஆயிரத்து 627 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 15 ஆயிரத்து 7333 வாகனங்கள் போக்குவரத்தை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்டு 7 கோடியே 10 லட்சத்து 29 ஆயிரத்து 724 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *