செய்திகள்

ஊரடங்கு மீறல்: கைதானவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியது

Spread the love

சென்னை, மே 20–

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியது.

கொரோனா தடுப்புப் பணியாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இன்று காலை 9 மணி வரை 4 லட்சத்து 70 ஆயிரத்து 338 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4 லட்சத்து 98 ஆயிரத்து 701 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 7 ஆயிரத்து 118 வாகனங்கள் போக்குவரத்தை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்டு 6 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 244 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்

சென்னையில் நேற்று (19–ந் தேதி) காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை சென்னை மாநகர போலீசார் நடத்திய வாகன சோதனையில் தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக 580 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 71 இருசக்கர வாகனங்கள், 128 ஆட்டோக்கள் மற்றும் 1 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 450 ஆட்டோக்கள் என மொத்தம் 452 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *