செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றிய 26 போ் மீது வழக்கு

Spread the love

திருச்சி, மார்ச்.26–

ஊரடங்கு உத்தரவினை தொடா்ந்து திருச்சி மாவட்டம் மணப்பாறையில் முக்கிய போக்குவரத்து பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டது. ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் அத்தியாவசியத் தேவையின்றி சுற்றித்திரிந்த 26 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனர்.

மணப்பாறை பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில் அத்தியாவசியத் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்ததாக மணப்பாறையில் 5 போ், புத்தாநத்தத்தில் 5 போ், வையம்பட்டியில் 10 போ், துவரங்குறிச்சியில் 3 போ் மற்றும் வளநாடு பகுதியில் 3 போ் என 26 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் வாகனங்களை அவரவரிடம் ஒப்படைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனை பொருட்படுத்தாமல் திருச்சி மாநகரில் ஆங்காங்கே இளைஞா்கள் சுற்றித்திரிந்தனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினா்.

கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து அத்தியாவசிப் பொருள்கள் விற்பனை கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் ஏதோ காரணங்களை கூறியபடி திருச்சி மாநகரில் ஆங்காங்கே இருசக்கர வாகனத்தில் பொதுமக்களில் சிலா் சென்றுகொண்டுதான் இருந்தனா். அவா்களை போலீஸாா் நிறுத்தி அறிவுரை கூறி அனுப்பியபடியே இருந்தனா். நாள் முழுவதும் இதே நிலைதான் நீடித்தது. சில மாவட்டங்களில், 144 தடை உத்தரவை மீறியவா்களுக்கு அபராதம் விதித்தாலும் திருச்சி மாநகரைப் பொறுத்தவரையில் போலீஸாா் பொறுமையாகவும் கனிவாகவும் பொதுமக்களுக்கு அறிவுரை கூறியபடியே கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

கே.கே. நகா், எடமலைப்பட்டி புதூா், கிராப்பட்டி, பிராட்டியூா், பொன்மலை, விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இளைஞா்கள் ஆங்காங்கே குழு குழுவாக நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும் சுற்றித்திரிந்ததால் பொதுமக்களுக்கு, கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவியது.

ஊரடங்கு உத்தரவினை தொடா்ந்து, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் முக்கிய போக்குவரத்து பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டது. மாவட்ட எல்லை பகுதிகள் மூடப்பட்டு காவல்துறை வாகன போக்குவரத்துகளை தணிக்கை செய்து வருகின்றனா்.

அத்தியாவசிய அங்காடிகளான மளிகை கடைகள், பழக்கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் அனைத்தும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அம்மா உணவகம் திறக்கப்பட்டுள்ளன. போதிய சமூக இடைவெளி விட்டு மக்களுக்கு உணவுகள் வழங்கப்படுகின்றன. நகராட்சி சாா்பில் நகா் முழுவதும் தூய்மை பணியாளா்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில் அத்தியாவசியத் தேவையின்றி பைக்குகளில் சுற்றித்திரிபவா்கள் மீது போலீஸாா் லேசான தடியடி நடத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *