செய்திகள்

ஊரடங்கில் 5,702 குடும்ப வன்முறை புகார்களுக்கு தீர்வு: ஏடிஜிபி ரவி பேட்டி

Spread the love

சென்னை, மே. 23–

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 5,702 புகார்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று ஏடிஜிபி ரவி கூறியுள்ளார்.

பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ரவி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் ஊரடங்கு நாட்களில் மட்டும் பெண்கள் மீதான வன்முறை தொடர்பாக 5,740 புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக சென்னையில் மட்டும் இதுவரை 45 புகார்கள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,424 புகார்களும், அடுத்தபடியாக நெல்லையில் 704 புகார்களும் பெறப்பட்டுள்ளன.

மிழ்நாட்டில் முதல்கட்ட ஊரடங்கின் போது 1,427 புகார்களும், 2ம் கட்ட ஊரடங்கின் போது 2852, 3ம் கட்ட ஊரடங்கின் போது 1461 புகார்களும் பதிவாகியுள்ளன. மொத்தம் பெறப்பட்ட 5,740 புகார்களில் சுமார் 5,702 புகார்களுக்கு அனைத்து மகளிர் போலீசார் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. குடும்ப வன்முறையில் ஈடுபட்ட 38 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை தொடரும். ஏற்கெனவே குடும்ப வன்முறையில் ஈடுபட்ட நபர்களையும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இவ்வாறு ஏடிஜிபி ரவி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *