சிறுகதை

ஊபர் உணவு | ராஜா செல்லமுத்து

“பாஸ்கர் என்ன சாப்பிடலாம்?

“பிரியாணி”

“ஓ.கே”

“மட்டனா? சிக்கனா?

“யுவர் சாய்ஸ்”

“ம் மட்டன் பிரியாணி வித் சிக்கன் 65” ஓ.கே.. வா?

“ம்” என்ற சங்கர் சொல்ல ஸோ மோட்டோ , ஊபர் ஈட்ஸ் என்று ஆன்லைன் உணவு ஆர்டரைத் தேடினான், பாஸ்கர், கொட்டிக்கிடந்த பெயர்ப்பட்டியல்களில் எதை எடுப்பது, எதை விடுப்பதென்று தெரியாமல் அத்தனையும் ஆராய்ந்து கொண்டிருந்தான் பாஸ்கர்

“டேய் சங்கர்

“நம்ம ஏரியாவுல ஆர்டர் குடுப்பா,

இல்ல கொஞ்சம் தள்ளி குடுப்பமா?

நம்ம ஏரியாவ பத்திதான் நமக்கு தெரியுமே, இங்க உப்பு சப்பில்லாம தான இருக்கும், வேற எடத்தில ஆர்டர் செய்வமே”

“ம்” என்ற பாஸ்கர் ஊபர் ஈட்ஸ்ல் புக் செய்தான். டேய், சங்கர் என்னென்ன ஆர்டர் பண்ணலாம்.

அதான் சொன்னனே. அதையே ஆர்டர் குடு என்ற சங்கர் தன் ஸ்மார்ட் போனில் மூழ்கினான்.

“மட்டன் பிரியாணி, சிக்கன் 65, இத்யாதி… இத்யாதி என்று ஆர்டர் குடுக்க… அது உடனே ஊபர் ஈட்ஸ்க்கு கனைக்ட் …ஆகி சர்வீஸ் நபரின் பெயரையும் பரிந்துரை செய்தது.

‘‘யுவர் ஆர்டர் இஸ் சக்சஸ் புல், இட்வில் ரீச் தேர்ட்டி மினிட்ஸ்” என்று காட்டியது .

மேலும் யுவர் சர்வீஸ் மேன் நேம் இஸ் வெங்கட்” என்றும் காட்டியது.

பாஸ்கர் உடனே வெங்கட்டுக்கு போன் செய்தான்.

“டிரிங்….. டிரிங்…. … வெங்கட்டின் போன் நீண்ட ரிங்கானது. கடைசி ரிங் கட்டாவதற்குள் “ஹலோ” என்றான், வெங்கட்.

“ஹலோ…. வெங்கட்டா?

“எஸ் சார்”

ஆர்டர் பாத்தீங்களா?

“எஸ் சார்” இன்னும் அரைமணி நேரத்தில வந்திருவேன்.

கொஞ்சம் சீக்கிரம் வரமுடியுமா?

நெறையா ஆர்டர் இருக்கு சார் ஒங்களோட அட்ரஸ் சொல்லுங்க, அதான் நான் பண்ணுன ஆர்டர்ல இருக்கே

“இல்ல சார்.. ஜஸ்ட் ஒரு கிளாரிபிகேசன் சீக்கிரமா வரலாமே அதான்’’

பில்லர் தெரியுமா?

எஸ் சார்”

“ம் …. பில்லர்ல இருந்து ஸ்ட்ரைட்டா வாரோம்ல…

“எஸ் சார் ” ஸ்ட்ரைடட்டா வந்து, போர்த் ரைட் அண்டு செகண்டு லெப்ட் எகெய்ன் ஸ்ட்ரைட் அண்டு லெப்ட், தேர்டு அவென்யூ – நம்பர் 103 போர்த் ப்ளோர், ஓ.கே வா” என்றான் பாஸ்கர்.

ஓ.கே சார் நான் வந்துர்றேன் என்ற வெங்கட், பாஸ்கரின் தொடர்பைத் துண்டித்தான்.

அவன் டூவிலரிலிருந்த ஊபர் ஈட்ஸ் பையில் சிக்கன், மட்டன், பிஷ்என்று அசைவப் பிரியாணி வகைகளும் அதற்கான சைடிஸ் அசைவ உணவு வகைகளும் நிரம்பி வழிந்தன. குழந்தையைப் போல் உணவுகளையெல்லாம் தன் முன்னால் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு சந்தடி மிக்க சாலைகளில் விரைந்து கொண்டிருந்தான். சுமந்து போகும் உணவுகளின் வாசனை காற்றில் கலந்து ஒவ்வொருவரின் நாசியிலும் ஏறியது,

ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளைத் தூக்கிக் கொண்டு மேல்மாடி, கீழ்மாடி என்று ஏறி இறங்கினான் வெங்கி.

‘‘ஹலோ ஆர்டர் கொடுத்து இவ்வளவு நேரமாச்சு. இப்ப வாரிங்க’’

இல்லையே சரியாதான வந்திருக்கேன்.

நாங்க குடுத்த அவகாச நேரத்துக்குள்ள வந்திட்டனே”

‘‘இல்லை அரை மணி நேரம் லேட்டு ”

“இல்லீங்க”

“சரி குடுங்க” என்று ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளைத் திட்டிக்கொண்டே வாங்கினான் ஒருவன் .

பணத்தை வாங்கிக் கொண்டே வெங்கட் விறுவிறுவென இறங்கினான்.

கரைக்டா தான குடுத்தோம் என்று அவனுக்குள்ளே பேசிக் கொண்டான் . அடுத்த ஆர்டரைக் கொடுக்க ஒரு வீட்டில் நுழைந்தான்.

சிக்கன் பிரியாணி, இறால் ரோஸ்ட், இருக்கா,

“இருக்குங்க” என்ற வெங்கட் அத்தனையும் கொடுத்து விட்டு பாஸ்கர் சொன்ன முகவரிக்கு விரைந்தான்.

“கிணிங்”என காலிங்பெல்லை அழுத்தினான்.

“எஸ்…’’ என்றபடியே பாஸ்கர் வந்தான்.

“எல்லாம் சரியா இருக்கா”

“இருக்கு சார், மட்டன், மீன், சுக்கா, இறால், போட்டி, எல்லாமே இருக்கு என்ற வெங்கட் அத்தனையும் கொடுத்துவிட்டு, தன் டூவிலரை முடுக்கினான். அப்போது, மணி மதியம் மூன்றைத் தொட்டு நின்றது.

“ம், …பசிக்குதே. சாப்பிட்டுருவமா? என்று அவன் உள்நெஞ்சு சொல்ல…

அருகே இருந்த ஒரு பார்க் பக்கம் தன் டூவிலரை நிறுத்தினான்.

தன்னுடைய வண்டியில் வாங்கி வைத்திருந்த தக்காளி சாதத்தை எடுத்தான்.

பார்க் வாசலில் ரோட்டிலேயே சாப்பிட ஆரம்பித்தான். அவன் போட்டிருந்த டீ சர்டில் ஊபர் ஈட்ஸ் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. தக்காளிச் சாதத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“கா…. கா….கா…. “என்று கத்திய காக்கைகள் சாப்பிடும் வெங்கட்டிடம் வரவில்லை.

மாறாக அசைவ உணவுகளைத் தாங்கியிருந்த ஊபர் ஈட்ஸ் என்று பொறிக்கப்பட்ட உணவு இல்லாத வெறும் பையையே வட்டமடித்துக் கொண்டிருந்தன. இதைப் பார்த்துச் சிரித்தபடியே தக்காளிச் சாதத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் வெங்கட்.

காகங்கள், வெறும் பையை வட்டமடித்தபடியே இருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *