செய்திகள்

ஊட்டி மலை ரெயில் சேவை 4 மாதத்திற்கு பிறகு தொடக்கம்

உதகை, செப். 6–

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ரத்து செய்யப்பட்ட உதகை மலை ரயில் போக்குவரத்துச் சேவை 4 மாதங்களுக்கு பிறகு இன்று தொடங்கி உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை நாள்தோறும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக புகழ் பெற்ற இந்த மலை ரயிலில் பயணிக்க, ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் சுற்றுலா பயணிகள் ஒரு இடத்தில் குவிவதை தடுக்கும் விதமாகவும் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி இந்த மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

முன்பதிவு

தற்போது கொரோனா 2வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று முதல் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது. இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படியே முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். முதல்வகுப்பு கட்டணம் ரூ.600 என்றும், இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.300 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று முன்பதிவு செய்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *