செய்திகள்

உ.பி.யில் ரூ.3,100 கடனுக்காக நிர்வாண ஊர்வலம்: 2 பேர் கைது

லக்னோ, செப். 20–

உத்தரப் பிரதேசத்தில் ரூ.3,100 கடனை திருப்பி செலுத்த தாமதமானதால், பூண்டு வியாபாரி ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் செக்டர் 88 இல் 35 வயது மதிக்கத்தக்க பூண்டு வியாபாரி ஒருவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கமிஷன் ஏஜென்ட்டிடம் ரூ.5,600 ஐ கடனாக வாங்கியிருந்தார். இந்த கடனில் ரூ.2,500 ஐ கமிஷன் ஏஜென்ட்டிடம் நேரில் சென்று திரும்ப கொடுத்திருக்கிறார். ஆனால் மீதமுள்ள பணம் எங்கே என்று கமிஷன் ஏஜென்ட் கேட்க, அடுத்த சில நாட்களில் தருவதாக பூண்டு வியாபாரி கூற, இதை ஏற்றுக்கொள்ளாத ஏஜென்ட் தகராறு செய்திருக்கிறார்.

மேலும் கமிஷன் ஏஜென்ட் மற்றும் அவரது உதவியாளர் சேர்ந்து பூண்டு வியாபாரியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலால் வியாபாரி நிலை குலைந்த நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கமிஷன் ஏஜென்ட்டும் அவரது உதவியாளரும் அவரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.

2 பேர் கைது

இதுகுறித்து நொய்டா கூடுதல் டிஜிபி ராஜீவ் தீட்சித் விளக்கமளித்துள்ளார். “சோஷியல் மீடியாவில் பூண்டு வியாபாரியின் நிர்வாண வீடியோ மற்றும் அவர் கொடுத்த புகாரின் பேரின் நாங்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறோம். முக்கிய குற்றவாளியான கமிஷன் ஏஜென்ட் சுந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர் பகந்தாஸ் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள், மேலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் மீது ஐபிசி பிரிவு 323, 342, 357, 504, 506 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66இ பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *