செய்திகள்

உழைப்பாளர் தினம்: எடப்பாடி, ஓ.பி.எஸ். வாழ்த்து

சென்னை, மே 1

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் போராடி உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும் உழைப்பின் மேன்மையை உலகிற்கு எடுத்துரைத்த உயர் தினமாகவும் திகழும் மே தினத்தில் உலககெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

இந்த உலகத்தையே தங்கள் தோள்களில் தாங்கி பிடித்து, தங்கள் கடின உழைப்பால் அதனை இடைவிடாது இயக்கிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் அடையாள தினமான மே 1 உழைப்பாளர் தினத்தில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.