செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் இரவு 7 மணி வரை நீட்டிப்பு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை, செப். 3–

உள்ளாட்சி தேர்தலின் போது வாக்குப்பதிவு 12 மணி நேரமாக நீட்டிக்கப்படுவதாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2019 ,ல் தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு சார்பில் மேலும் 6 மாதம் கால அவகாசம் கோரப்பட்டது. எனினும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளைத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டு, அண்மையில் வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டது.

12 மணிநேரம் வாக்குப்பதிவு

தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்காளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

வழக்கமாகக் காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை 10 மணி நேரத்திற்கும் குறையாமல் வாக்குப்பதிவு நடைபெறும். இந்நிலையில், காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 12 மணி நேரம் தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *