வாழ்வியல்

உள்மூலம், பவுத்திர கட்டி, ரத்த மூலத்தைச் சரியாக்கும் முளைக் கீரை

முளைக்கீரை கடைந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்; மனக்கவலை பறந்தோடிப்போகும். தேவையற்ற சிந்தனைகள் ஏற்படாது.சுறுசுறுப்பு அதிகமாகும் ; களைப்பு இருக்காது. முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உள்மூலம், பவுத்திர கட்டி, ரத்த மூலம் போன்றவை சரியாகும்.

முளைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் பசியின்மை நீங்கி, நல்ல பசி உண்டாகும்.

முளைக்கீரையுடன் சிறிது புளிச்ச கீரை, மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து அவித்து சாப்பிட்டால் ருசியின்மை குறைபாடு நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *