வாழ்வியல்

உலர் பழ வகைகளை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

உலர் பழங்களை அடிக்கடி சாப்பிடுவது இன்று பலரது வழக்கமாகி வருகிறது. உணவு இடைவேளையின் போது சாப்பிடும் அளவிற்கு இருந்த உலர் பழங்களை, பலரும் தினசரி சாப்பாடாகவே உட்கொள்கின்றனர். அந்த வகையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பாதிப்புகளை குறித்து பார்க்கலாம்.

பழங்களில் அதிகளவு நார்சத்து (ஃபைபர்) உள்ளது. மேலும் அவற்றை உலர்ந்த நிலையில் உண்ணும் போது, அதனுடைய சத்துகள் பன்மடங்கு அதிகமாக கிடைக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக நார்சத்து நிறைந்த உலர் பழங்களை சாப்பிட்டால், தசைப்பிடிப்பு மற்றும் ஆங்காங்கு உடல் வீக்கம் ஏற்படலாம்.

கலோரிகள் நிறைந்தது

பழங்கள் உலர் நிலையை அடையும் போது, அது செறிவான பதத்திற்கு மாறுகின்றன. இதன் காரணமாக அதில் சக்கரை சத்துகள் அதிகமாக இருக்கும். சக்கரை சத்துக்கள் அதிகமாக உட்கொள்ளும் போது, தலைவலி மற்றும் உடல்செறிமான பாதிப்பு ஏற்படும்.

எண்ணெய்யில் பொறித்த உணவுகளை தீனியாக சாப்பிடுவதை விட, உலர் பழங்களை அடிக்கடி சாப்பிடலாம். ஆனால், மைதாவில் வைத்து சமைக்கப்பட்ட உணவுகளோடு உலர் பழங்களை சாப்பிட வேண்டாம்.

உலர்ந்த நிலையில் இருக்கும் பழங்களை தண்ணீரோடு ஊற வைத்து சாப்பிடலாம். ஆனால் அதை அதிகமாக சாப்பிடுவது வயிறு கோளாறு ஏற்படலாம். உலர் பழங்களில் அதிகளவில் புரதச்சத்து உள்ளது. ஆனால் அவற்றை அளவுடன் சாப்பிடுவது சாலச் சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *