வாழ்வியல்

உலக வெப்ப அதிகரிப்பும் அதனுடைய விளைவும்–2

நீண்ட காலமாக உள்ள வெப்பம் உயரும் போக்கு 2018-லும் தொடர்ந்துள்ளது. கடல் மட்ட உயர்வு, பெருங்கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பது , பனிப்பாறைகள் உருகுவது உள்ளிட்டவை இதற்கு சில உதாரணங்கள்.

பருவநிலை மாற்றத்துக்கான இலக்குகளை நோக்கி நாம் சரியாக பயணிக்கவில்லை” என்று உலக வானிலை ஆய்வு நிறுவன தலைமைச் செயலாளர் பெட்டெரி டாலஸ் தெரிவித்துள்ளார்.

பசுமை இல்ல வாயுக்களின் செறிவுகள் மீண்டும் வரலாற்றில் அதிக அளவாக பதிவாகியிருக்கிறது. இந்நிலை நீடித்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் 3-5 செல்சியஸ் வெப்பநிலை உயர்வை நாம் எதிர்கொள்வோம் என்றும் கூறி இருக்கிறார்கள்.

பருவ நிலை மாற்றம் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளும் முதல் தலைமுறையும் நாம்தான். பருவநிலை மாற்ற விளைவுகளை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியக்கூடிய நிலையில் உள்ள கடைசி தலைமுறையும் நாம்தான். இதை மீண்டும் சொல்வது அவசியமானதாக இருக்கிறது என்று இதுதொடர்பான ஆய்வாளர்கள் கூறி இருப்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையானது கடந்த பத்து ஆண்டுகளில் அதாவது 2009 -2018 காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 0.93 செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும், இது தொழில்துறைக்கு முந்தைய காலகட்டமான 1850 – 1900 வரையிலான ஆண்டுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட சராசரி வெப்பநிலை உயர்வை விட, அதிகமாக இருப்பதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரி உயர்வானது 1.04 செல்சியஸ் அளவில் உள்ளதாகவும் குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *