செய்திகள்

உலக வங்கி நிதியுதவியுடன்‌ ரூ. 1763 கோடியில் மாற்றுத்திறனாளிகளின்‌ உரிமைத்‌ திட்டம்‌

சென்னை, பிப். 19–

உலக வங்கி நிதியுதவியுடன்‌ 1763 கோடி ரூபாய்‌ மதிப்பில்‌ மாற்றுத்திறனாளிகளின்‌ உரிமைத்‌ திட்டம்‌ (RIGHTS Project) முதற்கட்டமாக, 15 மாவட்டங்களில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புற உலகச்‌ சிந்தனையற்ற மதி இறுக்கம்‌ (Autism Spectrum Disorder) உடையோருக்குத்‌ தொடுதிறன்‌ சிகிச்சை, செயல்முறைப்‌ பயிற்சி, இயன்முறைப்‌ பயிற்சி, பேச்சுப்‌ பயிற்சி, சிறப்புக்‌ கல்வி, தொழிற்‌ பயிற்சி ஆகிய ஒருங்கிணைந்த மறுவாழ்வுச்‌ சேவைகள்‌ மட்டுமன்றி பெற்றோர்‌ மற்றும்‌ பராமரிப்பாளர்களுக்கான ஆற்றுப்படுத்தல்‌ சேவை, ஆராய்ச்சி மற்றும்‌ மேம்பாட்டுப்‌ பணிகள்‌ ஆகிய அனைத்து சேவைகளையும்‌ ஓரிடத்திலேயே பெற்றிடும்‌ வகையில்‌, புற உலகச்‌ சிந்தனையற்ற மதி இறுக்கம்‌ உடையோருக்கான உயர்திறன்‌ மையம்‌ (Centre of Excellence for Persons with Autism Spectrum Disorders) ஒன்று 25 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ சென்னையில்‌ அமைக்கப்படும்‌.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *