செய்திகள்

உலக ரத்ததானம் நாள்; குருதி கொடை அளித்து மனித உயிர் காப்போம்: ஸ்டாலின்

சென்னை, ஜூன் 14–

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில் ‘குருதி கொடை அளித்து மனித உயர் காப்போம்’ என கூறியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–

விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளின்போது பிறர் உயிர் காக்க குருதி கொடையளிப்போரின் நல்லுள்ளம் போற்றுவோம்!

சாதி – மதம் – நிறம் – பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை!

குருதிக் கொடையளித்து மனித உயிர் காப்போம்! மானுடம் தழைக்கச் செய்வோம்! என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.