செய்திகள்

உலக பல்கலைக்கழகங்களில் ‘‘தன்னம்பிக்கை’’ சொற்பொழிவாற்றிய அமெரிக்க வாழ் இந்தியர் ரவி சக்காரியாஸ் காலமானார்

சென்னை, மே. 22

சென்னையில் பிறந்து, டெல்லியில் வளர்ந்து, அமெரிக்காவில் வசித்த இந்தியரான கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்த ரவி சக்காரியாஸ் அட்லாண்டா வில் உள்ள இவரது இல்லத்தில் காலமானார். இவருக்கு வயது 74.

உலகம் முழுவதும் கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்துள்ள ரவி சக்காரியாஸ், ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்க ராணுவ முகாம்கள், பல்வேறு உலக பிரபல உலக பல்கலைக்கழகங்களில் ‘தன்னம்பிக்கை’ சொற்பொ ழிவாற்றியுள்ளார்.

ரவி சக்காரியாஸ் இன்டர்நேஷனல் மினிஸ்ட்ரிஸ் என்னும் கிறிஸ்தவ அமைப்பின் தலைவராக செயல்பட்டு, கிறிஸ்தவ சொற்பொழிவாற்றி வந்தார். இவர் பல நூல்களை எழுதி உள்ளார். பல்வேறு நாட்டு தலைவர்களை நேரில் சந்தித்து பிரார்த்தனை செய்து ஆசி வழங்கி உள்ளார்.

இவர் துவக்கிய வெல் ஸ்பிரிங் இன்டர்நேஷனல், இந்தியாவில் ஏழை, பாமர மக்களுக்கும், ஆதரவற்ற மகளிருக்கும், குழந்தைகளுக்கும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.

ரவி சக்காரியாசின் கொள்ளு தாத்தா டோபியஸ் (1907) முதல் மலையாளம் ஆங்கிலம் அகராதியை உருவாக்கியவர். இதன் மூலம் மலையாள மொழியில் முதல் பைபிள் உருவாக காரணமாக இருந்தது என்று ரவி சக்காரியாஸ் கவுரவமாக கருதினார்.

இவரது மனைவி மார்கி. இவருக்கு சாரா, நவோமி, நாதன் ஆகிய வாரிசுகள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *