லண்டன், ஜூலை 14–
ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. அந்தத் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி இன்று இந்திய நேரப்படி நேற்று இரவு பர்மிங்காம் நகரில் நடைபெற்றது.
அப்போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சோயப் மாலிக் 41 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அனுரீத் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 157 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 19.1 ஒவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 50 ரன்னும், யூசுப் பதான் 30 ரன்னும் எடுத்தனர்.