போஸ்டர் செய்தி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அறிவிப்பு

மெல்ர்போன், ஏப். 15–

உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில், இந்த போட்டித் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால், ஓராண்டு தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்) டேவிட் வார்னர், உஸ்மான் காவ்ஜா, ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், கிளேன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாயினிஸ், அலெக்ஸ் கேரி, பட் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், நாதன் கல்டர் நைல், ஜேசன் பெண்டோர்ப், அடம் சம்பா, நாதன் லயன்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *