செய்திகள்

உலக கோடீஸ்வரர்களில் 2ம் இடம் பிடித்தமார்க் ஸூகர்பெர்க்

Makkal Kural Official

நியூயார்க், அக்.4–

சொத்து மதிப்பில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஜெப் பிசோஸை முந்தியுள்ளார் மெட்டா சிஇஓ மார்க் ஸூகர்பெர்க். இதன் மூலம் தற்போது உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் 2ம் இடத்தில் உள்ளார்.

ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் தரவுகளின் படி தற்போது 206 பில்லியன் டாலர்களை நிகர சொத்து மதிப்பாக மார்க் ஸூகர்பெர்க் கொண்டுள்ளார். மெட்டாவின் ஏஐ சார்ந்த முதலீடுகள், நிறுவனத்தின் பங்குகள் ஏற்றம் கண்டது, செலவுகளை குறைக்கும் வகையில் 2022ம் ஆண்டில் 21 ஆயிரம் பணியாளர்களை நீக்கியது போன்ற நடவடிக்கைகள் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதன் மூலம் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

முதல் இடத்தில் உள்ள எக்ஸ் தள உரிமையாளர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் 256 பில்லியன் டாலர்களை சொத்து மதிப்பாக கொண்டுள்ளார். அவரை காட்டிலும் 50 பில்லியன் டாலர்கள் தான் மார்க் ஸூகர்பெர்க் பின்தங்கியுள்ளார். மூன்றாம் இடத்தில் உள்ள அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் 205 டாலர்களை சொத்து மதிப்பாக கொண்டுள்ளார்.

நடப்பு ஆண்டில் மட்டும் மார்க் ஸூகர்பெர்கின் சொத்து மதிப்பு சுமார் 78 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது. உலக அளவிலான 500 கோடீஸ்வரர்களில் நடப்பு ஆண்டில் அதிக வளர்ச்சி கண்டதும் அவர்தான் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 107 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 14ம் இடத்திலும், 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கவுதம் அதானி 17ம் இடத்திலும் உள்ளனர்.

10 இடங்களை பிடித்த

உலக கோடீஸ்வர்கள் பட்டியல்எலான் மஸ்க் – 256 பில்லியன் டாலர்

மார்க் ஸூகர்பெர்க் – 206 பில்லியன் டாலர்

ஜெப் பிசோஸ் –205 பில்லியன் டாலர்

பெர்னார்ட் அர்னால்ட் – 193 பில்லியன் டாலர்

லேரி எல்லிசன் – 179 பில்லியன் டாலர்

பில் கேட்ஸ் – 161 பில்லியன் டாலர்

லேரி பேஜ் – 150 பில்லியன் டாலர்

ஸ்டீவ் பால்மர் – 145 பில்லியன் டாலர்

வாரன் பபெட் – 143 பில்லியன் டாலர்

செர்ஜி பிரின் – 141 பில்லியன் டாலர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *