செய்திகள்

உலக அழகியாக ‘செக்’ குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா தேர்வு

Makkal Kural Official

மும்பை, மார்ச் 10–

இந்தியாவில் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த 71–வது உலக அழகிப் போட்டியில் ‘செக்’ குடியரசை சோ்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா அழகிப் பட்டம் வென்றார்.

போட்டியில் 112 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதன் இறுதிப் போட்டி மும்பையில் சனிக்கிழமை நடைபெற்றது. பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குனர் கரண் ஜோஹா, முன்னாள் உலக அழகி மேகன் யங் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

இறுதிப் போட்டியின் 12 பேர் அடங்கிய நடுவர் குழுவில் பிரபல நடிகைகள் கிருதி சேனன், பூஜா ஹெக்டே, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், உலக அழகி அமைப்பின் தலைவர் ஜமீல் சயீதி உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

இந்நிலையில், உலக அழகியாக செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முந்தைய உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்ற போலந்தின் கரோலினா பியலாவ்ஸ்கா உலக அழகி மகுடத்தைச் சூட்டினார்.

இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் மும்பையைச் சோ்ந்த சினி ஷெட்டி பங்கேற்றார். எனினும் அவரால் முதல் 4 இடங்களுக்கு முன்னேற இயலவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *