ஆர்.முத்துக்குமார்
உலக அரசியலில் ‘தனித்திரு விழித்திரு’ மனப்பான்மையால் எதையும் சாதிக்க முடியாது, இதைப் புரிந்து கொண்டு பிரதமர் மோடியும் இந்தியாவின் வல்லரசு கனவை நனவாக்க பல்வேறு அமைப்புகளில் இந்தியாவின் ஈடுபாட்டை அதிரிக்க வைத்து வருகிறார்.
காலத்தால் அழிக்க முடியாத நட்பு நாடான ரஷ்யா நமது வளர்ச்சியில் ஈடுபாடு கொண்டு பல்வேறு உதவிகளை செய்து வருவது அறிந்ததே. ஐ.நா. சபையின் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ரஷ்யா இந்தியா வருகை நல்லது என உணர்ந்து இருக்கும் அவர்களால் ஏன் நமது வல்லரசு கனவை பூர்த்தி செய்ய முடியாது தவிக்கிறார்கள்.
ஐ.நா. சபையில் நிரந்தர இடம் பிடிக்கத் தயாராக இருக்கும்போது ரஷ்யா தான் நமக்கு ஆதரவு தரத் தயார் என்று அறிவித்து உதவிக்கரம் நீட்டி வரவேற்றது.
ஆனால் அமெரிக்கா, சீனா நாடுகளின் ஆதிக்க அரசியல் காரணங்களால் ரஷ்யாவால் நமது ஐ.நா. சபையில் நிரந்தர இடத்தை பிடிக்கும் பணிகளுக்கு முட்டுக்கட்டை இருக்கிறது.
அதுசமயம் பிரிக்ஸ், எஸ்சிஓ அமைப்புகளில் இடம் பிடிக்க உறுதியான நடவடிக்கைகளையும் எடுத்தது. இது நமது செல்வாக்கை உலக அரங்கில் பல தலைவர்களுக்கு புரிய வைத்தது.
முன்பே நாம் சார்க், ஆசியான் அமைப்புகளில் அங்கம் வகிக்கத்தான் செய்து வருகிறோம்.
பிராந்திய கூட்டமைப்புகளில் அங்கம் வகிக்கும்போது நமது அக்கம்பக்கம் உள்ள நாடுகளுடன் நல்லுறவுகளை வளர்த்துக் கொள்ள முடிகிறது. வர்த்தக பரிமாற்றமும் ஏற்படுகிறது. எல்லை சச்சரவுகளுக்கு தூது செல்லவும் வழிகளை ஆலோசிக்கவும் நல்ல வழிகாட்டியை பெற தளமாகவும் மாறுகிறது.
இந்தியா சமீபமாக ஏசியான் ASEAN கூட்டமைப்பில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருவதை பார்க்கிறோம்.
வியட்நாம், இந்தோனிசியா, மலேசியா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பாக இருக்கும் இந்தக் குழுமத்தில் இந்தியாவின் செல்வாக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.
ஜி20 நாடுகளின் தலைமை சென்ற ஆண்டு வரை இந்தோனேசியா வசமும் அவர்களிடமிருந்து நமக்கும் வந்தது. ஆக ஆசிய பிராந்திய விவகாரங்கள் உலக தலைவர்கள் பார்வையில் உற்று கவனிக்கப்பட இது நல்ல சந்தர்ப்பமாக மாறியது.
ஆசியான் நாடுகளின் ஆதரவால் இந்தியாவின் ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பினராகும் கனவுக்கும் வலு சேர்க்கிறது. எதிர்ப்பாக இதுக்கும் சீனாவை இந்தியாவிற்கு ஆதரவு தராதே என கூற பாகிஸ்தானும் வியட்நாமும் அழுத்தம் கொடுத்தாலும் ஆசியான் அமைப்பு நமக்கு ஆதரவாக செயல்பட சீனாவையும் இதர நாடுகளையும் வலியுறுத்தினால் அது நமக்கு சாதகமானதாகும்.
ஆசியான் நாடுகளின் உதவி அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவசியம் தேவை என்பதை பார்க்கும்போது நமது பிரதமர் மோடி ஜி20 உச்சி மாநாட்டுப் பணிகளுக்கிடையே அவசரம் அவசரமாக ஆசியான் மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா சென்று திருமபியது நல்ல அறிகுறிகளாகும். அது மட்டுமா? இந்தியாவில் ஜி20 உச்சி மாநாட்டுப் பணிகளால் நேரக் கட்டுப்பாடுகள் பிரதமர் மோடிக்கு இருப்பதையும் உணர்ந்து அவர்களது நிகழ்ச்சி நிரலையே மோடியின் வருகைக்கு ஏற்ப மாற்றி இருப்பதும் கவனத்தை ஈர்க்கிறது.
ஜி 20 மாநாட்டில் உள்ள பல முக்கிய முடிவுகளுக்கு இறுதி வடிவம் தரப்பட்டு ஒப்பந்தங்கள் உருவாக்க இந்தியா ஆசியான் நாடுகளின் ஆதரவு இருந்ததற்கு அந்த பயணமும் ஓரு காரணமாகும். நாட்டோ கூட்டமைப்பு நாடுகளும் கூட அமெரிக்காவின் போக்கை விரும்பாமல் தள்ளி நிற்க ஆரம்பித்து விட்டது, காரணம் உலக வர்த்தகம் தளர்ந்து போனதால் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் திணறுவதுதான்.
ஆக ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடியின் பங்கேற்பு உலக அரசியலில் நமது பங்களிப்பை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது.
இந்தோனேசியாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டின்போது ஆசியான் – இந்தியா ஒத்துழைப்பை பலப்படுத்த 12 அம்ச திட்டங்களை பிரதமர் மோடி தாக்கல் செய்தார். அதில்
* தெற்கு–கிழக்கு–ஆசியா–இந்தியா–மேற்கு ஆசியா–ஐரோப்பாவை இணைக்கும் பொருளாதார வழித்தடம் ஏற்படுத்த வேண்டும்.
* இந்தியாவின் பொது சேவை டிஜிட்டல் உள்கட்டமைப்புகளை ஆசியான் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது.
* எதிர்கால டிஜிட்டல் திட்டங்களுக்காக ஆசியான் – இந்தியா நிதியம் ஏற்படுத்தப்படும்.
* ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியா அமைப்புகளின் பொருளாதார, ஆராய்ச்சி மையங்களுக்கு தேவையான உதவியை இந்தியா வழங்கும்.
* சர்வதேச அரங்குகளில் தெற்கு நாடுகளின் குரல் ஒருமித்து ஒலிக்க வேண்டும்.
* தெற்கு நாடுகளின் பிரச்சினைகளை எழுப்புவதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
* இந்தியாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையத்தோடு ஆசியான் நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
* சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியாவின் ‘லைஃப்’ இயக்கத்துடன் ஆசியான் நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
* மக்கள் மருந்தகம் திட்டத்தின் வெற்றி அனுபவங்களை ஆசியான் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது.
* தீவிரவாத அமைப்புகளுக்கான நிதியுதவியை தடுப்பது இணையவழி தாக்குதலை எதிர்கொள்வதில் ஒருமித்து செயல்பட வேண்டும்.
* பேரிடர் தடுப்பு தொடர்பான இந்தியாவின் சிடிஆர்ஐ அமைப்புடன் ஆசியான் நாடுகள் இணைய வேண்டும்.
* சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்.இதை நிறைவேற்ற ஆசியான் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ஜகார்த்தாவில் கிழக்கு ஆசிய கூட்டமைப்பின் உச்சி மாநாடும் நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியபோது, ‘‘சர்வதேச விதிகளின்படி இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும். தென் சீன கடல் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளின் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும்’’ என்றார்.
உலக அரசியலில் அதிகரித்து வரும் இந்தியாவின்
பங்களிப்பை உறுதி செய்து வரும் பிரதமர் மோடியை வாழ்த்தி வரவேற்போம்.