ஆர் முத்துக்குமார்
பிரதமர் நரேந்திர மோடி நாளை யுக்ரேனுக்கு அதிகாரபூர்வ பயணமாகச் செல்ல இருக்கிறார். இந்திய வெளியுறவு அமைச்சகம் இதை அதிகாரபூர்வமாகவே அறிவித்துள்ளது.இது இந்தியாவின் சர்வதேச நிலைப்பாட்டை இன்னும் வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஜூலை மாதத்தில் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பதவி ஏற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருந்த யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் செலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி நாளை , ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை, யுக்ரேனுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார்” என்று வெளியுறவு அமைச்சக செயலர் (மேற்கு), தன்மய் லால் திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
உண்மையில் இது ஒரு முக்கியமான மற்றும் வரலாற்றுப் பயணம் தான், காரணம் துதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டாலும் இந்திய பிரதமர் ஒருவர் யுக்ரேனுக்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா கணிசமான மற்றும் சுதந்திரமான உறவுகளைக் கொண்டுள்ளது, இந்தப் பயணம் இந்தியாவிற்கு இருதரப்பு வாதங்களுக்கு உரிய முக்கியத்துவம் தந்துள்ளதை உக்ரைன் பயணம் உறுதி செய்கிறது.
உக்ரைனுடன் நமக்கு அரசியல், பொருளாதாரம் மற்றும் ராணுவ ரீதி உறவுகள் எதுவுமே கிடையாது.ஆனால் ரஷியாவுடன் நமக்கு இருக்கும் நெறுக்கமும், நட்பும், பல துறைகளில் வர்த்தக கூட்டுக்களும் உலகம் அறிந்ததே!
ஆனால், ரஷ்யா-யுக்ரேன் மோதல் குறித்து இந்தியா மிகவும் தெளிவான மற்றும் நிலையான நிலைப்பாட்டை எடுத்து இருப்பதுடன் யாருக்கும் எதிர்ப்பு கிடயாது என்ற நிலைபாட்டை எடுத்துள்ளது. அதையே சர்வதேச அரங்களில் மாறுபடாமல் அறிவித்தும் வருகிறது.
கடந்த மாதம் தான் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு பிரதமர் மோடி மேற்கொண்ட முதல் ரஷ்ய பயணமாக இது அமைந்தது.
யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் செலென்ஸ்கிக்கு புதின் – மோடி இடையிலான இந்த நெருக்கம் பிடிக்கவில்லை, நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் பிடித்து இருக்க வாய்ப்பே கிடையாது.
ஆனால், ரஷ்யா-யுக்ரேன் மோதல் குறித்து இந்தியா மிகவும் தெளிவான நிலைப்பாட்டை எடுத்து இருப்பதுடன் யாருக்கும் எதிர்ப்பு கிடையாது என்ற நிலைபாட்டை எடுத்துள்ளது. அதையே சர்வதேச அரங்களில் மாறுபடாமல் அறிவித்தும் வருகிறது.
சமீபமாக உக்ரைன் பீரங்கி , வெடிமருந்துகள், இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை, நவீன டிரோன் விமான சக்தி ஆகியவற்றில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து உதவிகள் பெற்று அதைக் கொண்டு ரஷியா மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.
அதிர்ச்சி தரும் வகையில் நமது பிரதமர் மோடி மாஸ்கோவில் புதினை சந்தித்தும் பேசி வந்த பிறகு ரஷ்ய எல்லைக்குள் மிகப்பெரிய ஊடுருவல் தொடங்கியது.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் போலந்தின் பாதுகாப்பு அமைப்புகள் அதிகரித்து வரும் ராணுவ உதவிகளின் பயனாக உக்ரைன் இப்படி முன்னேறி வருவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
2022 செப்டம்பர் மாத நோர்ட் ஸ்ட்ரீம் தாக்குதல்களை நாம் நினைத்துப் பார்க்கும் போது அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதை பற்றி நாட்டோ நாடுகள் கவலைபட்டதாக தெரியவில்லை, அது போன்றே ரஷிய எல்லைப் பகுதி அனுமின் ஆலை மீதும் தாக்குதல் நடத்தினால்? என்ற அச்சக் கேள்வியும் எழுகிறது.
ரஷ்யா தங்களது பாதுகாப்புக்காக தற்காப்பு நடவடிக்கைகள் போதாது, திருப்பி அடித்து விரட்ட வேண்டும் என்ற விரக்தியான காலகட்டத்தில் , இங்கு போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் கெடுபிடி அரசியல் காரணங்களால் ஐநாசபையும் மவுனம் சாதித்துக் கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் மோடி உக்ரைன் செல்கிறார்.
மூன்றாம் உலகப்போர் என்ற மோகூட்டம் உலக அரங்கில் அமைதிக்கு பாதகம் விளைவிட்டுக் கொண்டு இருக்கும் இந்த கடும் நெறுக்கடியான நேரத்தில் பிரதமர் மோடி உக்ரைன் அதிபரை சந்திக்கிறார்.
இந்தியா உலகிற்கு புத்தரைக் கொடுத்தது, போரை அல்ல என மோடி ரஷியாவில் தெரிவித்தார்.
உக்ரைன் பயணத்தின் போது அந்நாட்டு தலைவருக்கு நல்ல அறிவுரைன் வழங்கி போர் தொடர வேண்டாமே என எடுத்துரைத்து மனமாற்றம் ஏற்படுத்த சந்தர்பம் அவருக்கு இருக்கிறது.
உலக வரலாற்றில் புதிய அமைதி சகாப்தத்தை துவக்க வழிபிறக்கலாம்.
இந்தப் பயணம், இந்தியா தனது சர்வதேச அரசியல் நிலைப்பாட்டை இன்னும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான நிகழ்வாகவே அமையும்; அமைய வேண்டும்.
அதுவே உலக அமைதியை விரும்பும் நம் அனைவரின் எதிர்பார்ப்பு.