வாஷிங்டன், மார்ச் 5-
அமெர்க்காவில் உள்ள உலகின் மிக உயரமான பிரம்மாண்ட ரோலர் கோஸ்டரின் ஆயுட் காலம் முடிவடைந்ததால் வெடிகூண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் தனியார் கேளிக்கை பூங்கா ஒன்று செயல்படுகிறது. அங்கு சுமார் 450 அடி உயரமுள்ள கிங்டா கா என்ற ரோலர் கோஸ்டர் இருந்தது
உலகின் மிக உயரமான உல்லாச சவாரி எந்திர இருந்த கிங்டா கா அந்த பகுதியின் மிகப்பெரும் அடையாளமாக இருந்தது. ஆனால் தற்போது அதன் ஆயுட்காலம் முடிவுக்கு வந்தது.
எனவே அதனை அகற்றி விட்டு புதிய உல்லாச சவாரி எந்திரத்தை அமைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் வெடிகுண்டு வைத்து கிங்டா கா உல்லாச சவாரி சவாரி எந்திரம் தகர்க்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இதில் 2 கோடிக்கும் அதிகமானோர் சவாரி மேற்கொண்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.