செய்திகள்

உலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு

வாஷிங்டன், மே 31–
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்ப ட்டோரின் எண்ணிக்கை 61 லட்சத்தை தாண்டியது. பலியானோரின் எண்ணிக்கை 3.70 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதுவரை 27 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 53,503 பேர் மருத்துவமனைகளில் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,16,820 ஆக உயர்ந்துள்ளது.
அது போல் பலியானோர் எண்ணிக்கை 1,05,557 ஆனது. பிரேசிலில் 4,98,440 பேர் கொரோனாவால் பாதிக்க ப்பட்டுள்ளனர். இங்கு பலி எண்ணிக்கை 28,834 ஆனது. ரஷ்யாவில் 3,96,575 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 4,555 பேராக உள்ளது. ஸ்பெயினில் 2,86,308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 2,72,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலி எண்ணிக்கை 38,376 பேர் பலியாகிவிட்டனர். இத்தாலியில் 2,32,664 பேர் பாதிக்கப்ப ட்டுள்ளனர். இங்கு பலி எண்ணிக்கை 33,340 பேர் ஆவர். பிரான்சில் பாதிக்கப்ப ட்டோரின் எண்ணிக்கை 1,88,625. இங்கு பலியானோர் எண்ணிக்கை 28,771. ஜெர்மனியில் 1,83,294. இங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 8,600 ஆனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *