செய்திகள்

உலகம் முழுவதும் முடங்கிய மைக்ரோசாப்ட் சேவைகள்

லண்டன், ஜன. 26-

உலகம் முழுவதும் மைக்ரோசாப்டின் அவுட்லுக், டீம்ஸ், மைக்ரோசாப்ட் 365 போன்றவற்றின் சேவைகள் பல மணி நேரம் முடங்கின.

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள கணினி ஆபரேட்டிங் சேவை நிறுவனமாக மைக்ரோசாப்ட் இருந்து வருகிறது. மைக்ரோசாப்டின் பிற சேவைகளான டீம், அவுட்லுக் மெயில் உள்ளிட்டவைகளும் உலகம் முழுவதும் ஏராளமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முதலாக உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் சேவைகள் பல இடங்களில் முடங்கியுள்ளன. அவுட்லுக் சேவை முடங்கியதால் மின்னஞ்சல்களை அனுப்பவும், பெறவும் முடியமால் போனதாக பயணாளர்கள் தெரிவித்தனர்.

உலகம் முழுவதும் பாதிப்பு இருந்தபோதும் இந்திய பயணார்களே அதிகம் புகார் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல் ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் பயனர்களும் மைக்ரோசாப்டின் சேவைகள் முடங்கியதாக புகார் அளித்தனர்.

அதை தொடர்ந்து, மைக்ரோசாப்ட் 365 டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நெட்வொர்க்கில் சிக்கல் இருந்ததாகவும், அதற்கு தீர்வு காணும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் மேற்கொண்டு தாக்கம் ஏதும் இல்லாமல் இருக்கும் வகையில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *