அறிவியல் வரலாற்றில் ஒரு அபூர்வமான ஒற்றுமை கொண்ட நாள். “பூமி நிலையானது அல்ல, அது நகர்கிறது” என்று உலகுக்கு முதன்முதலில் உரக்கச் சொன்ன கலிலியோ கலிலி மறைந்த தினம் இன்று. அதேபோல, அவர் சொன்ன அந்த உண்மையை, “இதோ பாருங்கள் பூமி தன் அச்சில் சுழல்கிறது” என்று ஊசல் பரிசோதனை மூலம் லியோன் ஃபோக்கோ நிரூபித்த நாளும் இன்றுதான். இன்று (ஜனவரி 8) நவீன அறிவியலின் தந்தை என்று போற்றப்படும் கலிலியோ கலிலி (Galileo Galilei)யின் நினைவு நாள்.
எதையும் அப்படியே நம்பாமல், பரிசோதனை (Experiment) மற்றும் உற்றுநோக்கல் (Observation) மூலம் நிரூபிக்கும் முறையை உலகுக்குக் கற்றுக் கொடுத்த கலிலியோ 1642-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி தனது 77-வது வயதில் காலமானார்.
இத்தாலியின் பீசா (Pisa) நகரில் 1564-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பிறந்தார். முதலில் மருத்துவத்துறையில் சேர்ந்தாலும், கணிதம் மற்றும் இயற்பியலில் இருந்த ஆர்வத்தால் அறிவியல் துறைக்கு மாறினார். அக்காலத்தில் நம்பப்பட்ட “பூமிதான் பிரபஞ்சத்தின் மையம்” என்ற கருத்தை எதிர்த்து, “சூரியனே மையம்” (Heliocentrism) என்று நிரூபித்தார். இதற்காக அவர் பல எதிர்ப்புகளையும், வீட்டுச் சிறையையும் சந்திக்க நேரிட்டது.
கலிலியோ வெறும் கோட்பாடுகளை மட்டும் கூறாமல், கருவிகள் மூலம் அவற்றை நிரூபித்தார்.
தொலைநோக்கி (Telescope): தொலைநோக்கியை மேம்படுத்தி, வானில் உள்ள கோள்களைத் தெளிவாக ஆராய்ந்த முதல் மனிதர் இவரே.
புதிய ஊசல் விதிகள்:
வியாழனின் நிலவுகள் (Moons of Jupiter): வியாழன் கிரகத்தைச் சுற்றி நான்கு நிலவுகள் (Io, Europa, Ganymede, Callisto) வலம் வருவதைக் கண்டுபிடித்தார்.
ஊசல் விதி (Law of Pendulum): ஊசலின் அலைவு நேரம் அதன் நீளத்தைப் பொறுத்தது என்பதை விளக்கினார். இதுவே பின்னாளில் கடிகாரங்கள் உருவாக அடிப்படையாக அமைந்தது.
மேலும் இன்று 1851ல் ஆண்டு பிரெஞ்சு இயற்பியலாளர் லியோன் ஃபோக்கோ (Léon Foucault), பூமி தனது அச்சில் சுழல்கிறது என்பதை ஒரு எளிய ஊசல் (Pendulum) மூலம் உலகுக்கு நிரூபித்தார்.
சூரியக் கரும்புள்ளிகள் (Sunspots): சூரியனில் கரும்புள்ளிகள் இருப்பதையும், சூரியன் தன்னைத்தானே சுற்றுகிறது என்பதையும் கண்டறிந்தார்.
வெப்பமானி (Thermoscope): வெப்பத்தை அளவிடும் தற்போதைய தெர்மாமீட்டரின் முன்னோடியான தெர்மோஸ்கோப்பை வடிவமைத்தார்.
இன்று நாம் பயன்படுத்தும் நவீன விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சிந்தனைகளுக்கு வித்திட்டவர் கலிலியோ தான். நியூட்டன் போன்ற பிற்கால அறிஞர்கள் புவியீர்ப்பு விசை விதிகளை உருவாக்க கலிலியோவின் இயக்க விதிகள் (Laws of Motion) தான் அடிப்படையாக அமைந்தன.
![]()




