கதைகள் சிறுகதை

உறவுகள் – ஜெ. மகேந்திரன்

Makkal Kural Official

‘கீதா, பாப்பா உனக்கு சாக்லெட்டுக்கள் வாங்கிக்க. உனக்கு 2 சவரன்ல தங்கச் செயின் போடறேன். சரியா.

‘மாமா சரியாச் சொல்லு. 2 சரவன் செயினா, 3 சவரன் செயினா?

சரி 3 சவரன் செயின் வாங்கித் தர்றேன் ;போட்டுக்கலாம்.

சரி மாமா.

*

இரவு கழிந்தது.

காலையில் டேய் முத்து, ஏதோ இன்பச் சுற்றுலான்னு சொன்னீயே?

ஆமாம்,சொன்னேன்.

சரி, வங்கியில், கணிசமான தொகை தருகிறேன். நீ கிளம்பு.

என்ன 2 நாள் கழித்தா?

ஆமாம் .

அண்ணா இன்று திங்கள் கிழமை, புதன் கிழமை செல்ல வேண்டும்.

பத்திரமாக போய்விட்டு வா.

சரிண்ணா.

*

‘என்னம்மா மாலதி. நீ என்ன உன் குழந்தைக்கு கம்மல் – செயின் வாங்க வேண்டுமின்னியே

ஆமாண்ணா, ரொம்ப நாள் கனவு. ஒரு 6 சவரன்ல வாங்கணும்.

வாங்கிக்கம்மா.

*

இப்படி உறவில் வேரூன்றி பழம் தரும் கனி மரமாக வாழ்கிறவன் முரளி.

அவனுக்கு திடீரென திருச்சிக்கு வேலை மாற்றலாகியது.

நான் திருச்சிக்கு செல்கிறேன். குடும்பம் சரியாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். ஏதாவது செய்தி இருந்தால் எனக்கு போன் செய்யுங்கள். சரியா?

*

திருச்சியில் இவன் பணிபுரியும் அலுவலகத்தில்

மாலா என்ற பெண் ,‘‘ சார் முரளி சார் எப்ப பார்த்தாலும் குடும்பம் குடும்பம் என போனும் கையுமாக உள்ளீர்களே. நீங்க ரொம்ப நல்லவுங்க சார் ’’.

அதற்கு முரளி ,

‘‘அதுக்குத்தான் உறவு’’. அவளை காதலித்து திருமணம் செய்யலாமா என்று கூட முரளி அவளிடம் சொல்லியிருந்தான்.

முரளியின் போக்கு இவளுக்கு பிடிக்கவில்லை. முரளி பணம் காய்க்கும் மரம் என்று புரிந்து கொள்கிறாள்.

அலுவலகத்தில் இவன் டிராயரில் பணம் வைத்திருந்தான். அதில் 50,000 பணத்தை எடுத்து உடனே பைக்கில் சென்று விடுகிறாள் மாலா.

முரளி வந்து பார்க்க பணமில்லை.

அதிர்ச்சியுடன் மானேஜர்: பணம் எங்கே? என்கிறார்.

முரளி வேலை போகிறது. வீட்டுக்கு வந்த முரளி, நடந்தவற்றை கூறுகிறான்.,

வீட்டின் உறவுகள் இவனை தாங்கலாக தாங்கிப் பிடித்துக் கொள்கிறது.

காதல் திருமணம் ஆசையே இவனுக்கு அற்றுப் போகிறது.

எதிர்பாராத விதமாக பணம் திருடிய மாலா ஒருநாள் முரளி முன் வந்து நின்றாள்.

‘‘உங்கள் பணம் திருடிய ஒரு சில நாட்களிலேயே என் கணவன் இறந்து விட்டார். உறவு என்று கூறுவீர்களே என் அன்பு உறவு இப்போது இல்லை. என்னை மன்னியுங்கள்’ என்றாள்.

‘‘ என் பணம் திருடிய உனக்கு உறவுகளை பற்றி என்ன தெரியப்போகுது.

இனி ஒரு நிமிடம் கூட எங்கள் முன்னால் நிற்கக் கூடாது போ. ஒரு சில மாதங்களில் மீண்டும் இதைவிட நல்ல வேலை கிடைக்க உறவுகளின் உறவுகளுக்காக வாழ்கிறான் முரளி.

இவன் உறவுகள் இவனுக்கு மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது திருமணம் இல்லையென்றாலும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *