செய்திகள்

உருளைக்கிழங்கு சாறு குடிப்பதால் சிறுநீரகக்கற்கள், நீரேற்றம் குணமாகும்


நல்வாழ்வுச் சிந்தனைகள்


உருளையில் மிகுந்துள்ள சத்துக்களோடு “டேனின்ஸ்”, ஃபிளேவனாய்ட்ஸ்”, மற்றும் “ஆல்கலாய்ட்ஸ்” ஆகியன அடங்கியுள்ளன. இவற்றில் “டேனின்ஸ்” என்னும் சத்துப் பொருள் வற்ற வைக்கும் தன்மை உடையது. இதனால் வயிற்றுப் போக்கு தவிர்க்கப்படுவதோடு குணப்படுத்தவும் இயலுகிறது.

* சமீபகால ஆய்வுகள் மூலம் பச்சை உருளைக் கிழங்கின் சாற்றை பருகுவதன் மூலமும் உருளைக் கிழங்கினை வேகவைத்த நீரைப் பருகுவதன் மூலமும் மூட்டு வலிகள், வாத வீக்கம் ஆகியன குணமாகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது. உருளைக் கிழங்கு சாறு, உருளைக் கிழங்கு வேக வைத்த நீர் பருகுவதால் அதில் பொதிந்திருக்கும் பொட்டாசியம், “சல்பர்”, “பாஸ்பரஸ்”, குளோரைட் ஆகியனவும் “விட்டமின் சி” சத்தும் “என்ஸைம்கள்” என்னும் வேதிப் பொருள்களும் தோலுக்கு ஆரோக்கியம் தருவதோடு மிக்க பொலிவையும் பளபளப்பையும் உண்டாக்குகிறது. மேல்பூச்சாக பூசுவதால் தோலின் இறந்த திசுக்களை அகற்றி விட்டு புதிய திசுக்களை வளரச் செய்யும் உரமாகிறது. பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவையும் காணாமல் போகின்றன.

* உருளைக்கிழக்கு சாறு பருகுவதனாலும் மேல் பற்றாகப் போடுவதனாலும் கண்களின் கீழே நீர் கோர்த்துக் கொண்டு நீர்ப்பை போல தோன்றுகின்ற வீக்கம் வற்றிப் போகும். கண்களுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் ஏற்படும்.

* உருளைக்கிழங்கு சாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் நீண்ட நாட்பட்ட மலச்சிக்கல் குடலில் நச்சுக்கள் பெருகி அதனால் ஏற்படும் ரத்த அழுத்தம் டினல் டோக்ஸிமியா தவிர்க்கப்படுகிறது. பொதுவாக கருவுற்ற தாய்மார்களுக்கு இதுபோன்ற ரத்த அழுத்தம் ஏற்படுவது இயற்கையாகும். மேலும் மூட்டுக்களில் வாத நீர் தேங்கி வீக்கமும், வலியும் உண்டாக்குகின்ற “கவுட்” என்னும் நோய், சிறுநீரகக்கற்கள், மற்றும் நீரேற்றம் ஆகியனவும் பல மாதங்கள் தொடர்ந்து உருளைக்கிழங்கு சாறு குடிப்பதால் குணமாகிறது என்பது ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *