செய்திகள்

உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படும் ‘ஸ்புட்னிக்-–வி’

மாஸ்கோ, மே 16–

ஸ்புட்னிக்-–வி தடுப்பூசி உருமாறிய கொரோனாவிற்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுகிறது என இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் குடாஷேவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ள நிலையில், 3வது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்–-வி தடுப்பூசி தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இது குறித்து இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் குடாஷேவ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

ஸ்புட்னிக்-–வி தடுப்பூசியின் செயல்திறன் உலகம் அறிந்ததாகும். கடந்த ஆண்டின் 2-ம் பாதியில் இருந்து, ரஷ்ய மக்களுக்கு ஸ்புட்னிக்-–வி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியானது, உருமாறிய கொரோனாவிற்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஸ்புட்னிக்-–வி தடுப்பூசி இந்தியாவிலும் தயாரிக்கப்பட உள்ளது. எனவே இது இந்திய- – ரஷ்ய தடுப்பூசியாகும். ஸ்புட்னிக்–-வி தடுப்பூசி இந்தியாவில், அடுத்த ஒரு ஆண்டிற்குள் 850 மில்லியன் டோஸ்கள் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரே தவணையில் செலுத்தும் தடுப்பூசியை தயாரிப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *