செய்திகள்

“உரம் செய்ய விரும்பு” திட்டம் அறிமுகம்

கோவை:

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட ராம்நகர் மாநகராட்சி ராமலிங்கம் பெண்கள் மேல்நிலை பள்ளியில், மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து மக்கும் குப்பைகளை கொண்டு வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிக்கும் பணி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களிடையே “உரம் செய்ய விரும்பு” திட்டத்தை அறிமுகம் செய்து துண்டறிக்கைகளை மாநகராட்சி கமிஷ்னரும் தனி அதிகாரியுமான விஜயகார்த்திகேயன் வெளியிட்டார். இதில், செயற்பொறியாளர் சரவணக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் திருமால், ராதா கிருஷ்ணன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *