தலையங்கம்
இந்தியர்களுக்கு அமெரிக்கா 2024-ஆம் ஆண்டில் பத்து லட்சம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கு குடியேறாத விசாக்களை வழங்கியது, அதில் சுற்றுலா விசாக்கள் அதிகமானதை அமெரிக்காவின் இந்திய தூதரகம் சமீபத்தில் அறிவித்தது.
இது இந்தியர்கள் அமெரிக்கா பயணம் செய்யும் எண்ணம் தொடர்ந்து உயர்ந்து வருவதையே மீண்டும் சுட்டிக்காட்டுறது.
இது சுற்றுலா, வியாபாரம் மற்றும் கல்விக்கான பெருமளவு தேவை இருக்கிறதை உணர்த்துகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.
2024-இல் முதல் 11 மாதங்களில் 20 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர். இது 2023-ஆம் ஆண்டின் அதே காலக்கட்டத்தை விட 26 சதவீதம் அதிகமாகும்.
“அமெரிக்காவில் கல்வி கற்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 2024-இல் இந்தியா முதல் முறையாக 2008/2009 கல்வியாண்டுக்கு பிறகு அமெரிக்கா செல்லும் சர்வதேச மாணவர்களின் முதல் இடத்தை பிடித்துள்ளது. 3,31,000 மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி கற்கின்றனர்,” என்று கூறியுள்ளது.
மேலும் இந்தியா இரண்டாவது ஆண்டாகவும் அமெரிக்காவில் அதிக அளவில் சர்வதேச பட்டமேற்படிப்பு மாணவர்களை அனுப்பும் நாடாக நீடிக்கின்றது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களின் அதிகரிக்கும் அமெரிக்க விசா தேவை, சுற்றுலா மற்றும் கல்வி சந்தைகளின் விரிவாக்கத்தைக் காட்டுவதுடன், இரண்டு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது.
உயர் கல்வியில் இந்திய மாணவர் ஈடுபாடு காட்டுவது உச்சத்தில் இருப்பதால் இந்திய மாணவர்கள் வெளிநாடுகள், குறிப்பாக அமெரிக்கா செல்வதும் அதிகரித்து வர முக்கிய காரணமாக இருக்கிறது,
வரும் காலத்தில் உயர்தர கல்வி நம் மண்ணிலேயே கிடைத்துவிட்டால் அது நமது
இந்திய மாணவர்கள் செல்வதும் அதிகரித்து இருப்பதையும் பார்க்க முடிகிறது. “அமெரிக்காவில் கல்வி கற்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 2024-இல் இந்தியா முதல் முறையாக 2008/2009 கல்வியாண்டுக்கு பிறகு அமெரிக்கா செல்லும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை முதல் இடத்தை பிடித்துள்ளது. 331,000 மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி கற்கின்றனர்,” என்று கூறியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருவதாக கூறியிருந்தார்.
வெளிநாட்டில் உள்ள இந்திய துதரக அதிகாரிகள் குளோபல் ரிஷ்டா போர்ட்டலில், Global Pravasi Rishta Portal’, பதிவு செய்ய ஊக்குவிக்கின்றன. முதன்முறையாக வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்களுக்கான வரவேற்பு விழாக்களை அவர்கள் ஏற்பாடு செய்து, படிக்க வந்துள்ள நாடுகளில் உள்ள பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்தும் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.