வாழ்வியல்

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் எப்பொழுதும் விளக்கப் படுவதில்லை. ஆனால் பின்வருபவை ஒருவித காரணியாகச் செயல்படுகிறது. குறைவான உடல் உழைப்புஉடல் எடை அதிகரிப்பு (Overweight or Obese)உணவில் சேர்க்கப்படும் அதிக அளவு உப்பு, குடிப்பழக்கம், உயர் இரத்த அழுத்தத்திற்கான குடும்பப் பிண்ணனி உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இல்லை எனினும் உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதால் பிற்காலத்தில் உயர் இரத்த அழுத்தம் வருவதை முற்றிலுமாகத் தடுக்கலாம்.

ஆய்வுகளில் 95 சதவீதம் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பின்வரும் காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அவை… புகைப் பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றம்.

இரத்தம் குறைந்த அளவில் சிறுநீரகத்திற்கு எடுத்துச் செல்லப்படுதல், சிறுநீரகக் கோளாறுகளினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகக் கொழுப்பு தமனிகளில் படிவதனால் இருதய தமனிகள் சுருங்குதல் கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொள்ளுதல் போன்றவையாகும்.

கவலை, பதற்றம், சோர்வு, பயம், மன அழுத்தம் போன்றவைகளால் கூட இரத்த அழுத்தத்தின் அளவு கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மேலும் உணவில் சேர்க்கப்படும் அளவிற்கு அதிகமான உப்பு இரத்தத்தில் கலந்து இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. எனவே இரத்தமானது உடலில் உள்ள நீரினை எடுத்துக் கொண்டு சிறுநீரின் மூலமாக இரத்தத்தில் கலந்துள்ள உப்பினை வெளியேற்ற முனைகிறது. இவ்வாறான செயல்பாடுகளினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *