வாழ்வியல்

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

மாரடைப்பு , பக்க‌ வாதம் ஏற்படுவது எப்படி?

நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை திசுக்களில் சேர்ப்பதும் திசுக்கள் உருவாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதும் இரத்ததின் மூலம் தான் நடைபெறுகிறது.

எனவே இரத்தம் என்பது நம் உடலில் உள்ள மூலை முடுக்குகளில் எல்லாம் பாய்ந்து செல்கிறது. இதனையே நாம் இரத்த ஓட்டம் என்று குறிப்பிடுகிறோம். ஆகையால் இரத்தம் நம் உடல் முழுவதற்கும் பரவுவதற்கு ஒரு விதமான அழுத்தம் இரத்தத்தால் செலுத்தப்படுகிறது.

இவ்வாறு தமணிகளில் செல்லும் இரத்த ஓட்டத்தில் செயல்படுத்தப்படும் அழுத்தம் இதயத் துடிப்பில் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. இதுவே இரத்த அழுத்தம் (Blood Pressure) எனப்படுகிறது.

நம் இதயம் சுருங்கும் போதும், உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரத்தத்தைச் செலுத்தும் போதும் தமணிகளில் ஏற்படும் இரத்த ஓட்டத்தின் அழுத்தம் அதிகமாகவும் இதயம் விரிந்து இரத்தம் இதயத்தில் நிரம்பும்போது தமனிகளில் ஏற்படும் இரத்த ஓட்டத்தின் அழுத்தம் குறைவாகவும் காணப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) அல்லது இரத்தக் கொதிப்பு (Hypertension) என்பது நம் இரத்த அழுத்தம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் அளவினை விட அதிகமாக இருப்பதே ஆகும்.

சில நேரங்களில் உங்களால் இதை உணர முடியும். ஆனால் தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் இதயத்தின் செயல்படும் தன்மை குறைக்கப்படுகிறாது. இச்செயல் “இதய செயலிழப்பு” (Heart Failure) ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது.

மேலும் உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு (Heart Attack) மற்றும் வாதம் (பக்க‌ வாதம்) ஏற்படுவதற்கான வாய்ப்பினை அதிகப் படுத்துகிறது.

நன்றி : டாக்டர் விவேக் பெலிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *