செய்திகள்

உத்தரபிரதேசத்துக்கு 10 அமைச்சர் பதவி

புதுடெல்லி,மே.31–

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் இருந்து 10 பேர் இடம் பெற்றுள்ளனர். தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை.

பிரதமர் மோடியின் அமைச்சவையில், உத்தர பிரதேசத்தில் இருந்து அதிகபட்சமாக 10 பேர் இடம் பெற்றுள்ளனர். அதுவும் கிழக்கு உத்தரபிரதேசத்தில் இருந்து அதிகம் பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுதவிர ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி, முக்தார் அப்பாஸ் நக்வி, மகேந்திர நாத் பாண்டே, சந்தோஷ் காங்வார், ஹர்தீப் சிங் பூரி, வி.கே.சிங், சாத்வி நிரஞ்சன் ஜோதி, சஞ்சய் பால்யான் ஆகியோர் உத்தரபிரதேசத்தில் இருந்து அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டவர்கள்.

அதற்கு அடுத்தபடியாக மஹாராஷ்டிராவிலிருந்து 8 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. மத்தியபிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து தலா 5 பேரும், கர்நாடகாவிலிருந்து 4 பேரும், குஜராத், அரியானா, ராஜஸ்தானிலிருந்து தலா 3 பேரும் அமைச்சரவையில் இடம் பெற்றனர். மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் மற்றும் ஜார்க்கண்டிலிருந்து தலா 2 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.

மேலும் அருணாச்சல், அசாம், சத்தீஸ்கர், டெல்லி, கோவா, இமாச்சல், காஷ்மீர், தெலுங்கானா, உத்தரகண்டிலிருந்து தலா ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. தமிழகம், ஆந்திரா, சிக்கிம், மணிப்பூர், திரிபுரா, மிசோரம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *