பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு
டெல்லி, ஜூலை 5–
உயர்கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர்களை நேரடியாக நியமிக்க நெட் தேர்வில் பெறுவது அவசியம் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர்களை நேரடியாக நியமிக்க நெட், செட், ஸ்லெட் (NET/SET/SLET)ஆகிய தேர்வுகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
‘நெட்’ தேர்ச்சி கட்டாயம்
அதன்படி, ஜூலை 1 ந்தேதி முதல் உதவி பேராசிரியர்களை நேரடியாக நியமிக்க, குறைந்தபட்சமாக நெட், செட், ஸ்லெட் ஆகியவற்றில் ஏதாவது ஒரு தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎச்.டி. படித்தவர்களை உதவிப் பேராசிரியராக நியமனம் செய்வதற்கான தகுதி, ஜூலை 1 முதல் விருப்ப தேர்வாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், யுஜிசி நெட் தேர்வு முடிவை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வெளியிட தேசிய தேர்வு முகமை முடிவு செய்திருப்பதாகவும் பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.