அண்ணா, கருணாநிதி சமாதியில் மரியாதை
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துபெற்றார்.
மேலும், தமது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அங்க நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கோபாலபுரம் கலைஞர் இல்லத்துக்கு சென்று கலைஞர் படத்துக்கு மரியாதை செலுத்தினார். வேப்பேரி பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
முன்னதாக சென்னை சி.ஐ.டி நகரில் உள்ள முதல்வர் இல்லத்துக்குச் சென்று, தனது தந்தையும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், – தாய் துர்கா ஸ்டாலினிடம் பிறந்தநாள் வாழ்த்துகளையும், ஆசிகளையும் பெற்றுக்கொண்டார். அப்போது, முதல்வர் ஸ்டாலின், உதயநிதியை உச்சி முகர்ந்து முத்தமிட்டு வாழ்த்துத் தெரிவித்தார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “உயிரையும், உடலையும் தந்தது மட்டுமின்றி தமிழ்நாட்டை நேசிக்கும் உணர்வையும் – அயராது உழைப்பதற்கான ஆற்றலையும் தந்து கொண்டிருக்கும் கழகத்தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும், ஈன்றெடுத்த அன்புத்தாயாரிடமும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டோம். எந்நாளும் வழிநடத்தும் தாய் – தந்தையின் வாழ்த்தைப் பெற்று நம் பணிகளை தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் கமல் ஹாசன், அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.