செய்திகள்

உணவு மானியத்துக்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு

சென்னை, மார்ச் 20–

உணவு மானியத்திற்காக இந்த ஆண்டு 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சட்டசபையில் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

பட்ஜெட் உரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:–இந்த அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகளான விவசாயக் கடன் தள்ளுபடிக்கு 2,393 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்கு 1,000 கோடி ரூபாயும், சுய உதவிக்குழு கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு 600 கோடி ரூபாயும் என மொத்தம் 3,993 கோடி ரூபாய் வரவு–செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் செயல்திறனையும் நிதி நிலையையும் மேம்படுத்த அடிப்படைச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான, நீண்டகாலத் திட்டமொன்றை அரசு வகுக்கும். பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்காக, இந்த வரவு–செலவுத் திட்டத்தில் 10,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 16,262 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *