வாழ்வியல்

உணவு கட்டுப்பாடின்றி எடையை குறைக்க உதவும் நடைப்பயிற்சி–1

நடைப்பயிற்சி என்றாலே உடலுக்கு நலன் பயக்க கூடியதுதான், அதிலும், அதிகாலை மெற்கொள்ளக்கூடிய நடைப்பயிற்சியினால், உடலுக்கு புத்துணர்வு கிடைப்பதுடன், உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் பல நோய்களிலிருந்து தப்பித்து கொள்ள முடியும் என சொல்கின்றனர் ஆய்வாளர்கள்.

பெரும்பாலும் உடலில் பிரச்சனை ஏற்பட்ட பின்னரே, மருத்துவரின் ஆலோசனைப்படியே நம்மில் பலர் நடைப்பயிற்சி மேற்கொள்கிறோம். ‘கண்கெட்ட பின்னர் சூர்ய நமஸ்காரம்’ என்பது போல, நீரிழிவு, உடல் பருமன், இதயத்தில் ஏற்படும் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை சந்தித்த பின், நடைப்பயிற்சி மேற்கொள்வதை காட்டிலும், வரும் முன் காப்பதே சிறந்தது.

ஆக, முடிந்தவரை அதிகாலை நடைப்பயிற்சியை அனைத்து வயதினரும் மேற்கொள்ள வேண்டும். சரி, இந்த நடைப்பயிற்சி மேற்கொள்வதால், நம் உடலுக்கு என்னென்ன‌ பயன்கள் கிடைக்கும் என பார்க்கலாம்.

அதிகாலை, அதாவது 4.30 லிருந்து 6 மணிவரை நடைப்பயிற்சி மேற்கொள்வதால், உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்ஸிசன் கிடைக்கிறது. இதனால் நாள் முழுவதும் புத்துணர்வுடன் செயல்பட இயலும்.

மெதுவாக நடந்தால் கூட, கால் மூட்டு வலிக்கிறது, என சொல்பவர்களுக்கு சிறந்த பயிற்சியே, நடைப்பயிற்சி தான், தினமும் அதிகாலை நடைப்பயிற்சி செய்து வந்தால் உங்களின் மூட்டு பிரச்னை காணாமல் போய்விடும்.

அதிகாலை நடைப்பயிற்சி, இதய வால்வுகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்து, மரடைப்பு ஏற்படுத்தும் அபாயத்தை குறைக்கிறது என, ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. மேலும் இந்த நடைப்பயிற்சி இதயம் செயலிழப்பிற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *