சிறுகதை

உணர்ச்சியற்ற உறவுகள் – ராஜா செல்லமுத்து

இரவு நேரம்.

பரிமளம் படுக்கையில் படுத்துக் கிடந்தார். அவரைச் சுற்றி ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். அவரின் இறுதிக் காலம் என்பதால் நடப்பதெல்லாம் அவருக்கு தெரியாமல் இருந்தது .

எப்படியும் ஒரு நாளுக்குள் அவரின் உயிர் அவரின் உடலை விட்டுப் பிரிந்து விடும் என்ற நிலை இருந்தது .

அவர் பெற்ற பிள்ளைகள் எல்லாம் பணம் சம்பாதித்து வீடு. கார். புகழ் பேர் இது அத்தனைக்கும் ஆசைப்பட்டு சேர்த்து வெளிநாட்டில் செட்டில்ஆகி இருந்தார்கள்.

அவருடன் உறவுகள் என்பது ஒன்றுமில்லை. ஏற்கனவே மனைவியை இழந்த பரிமளம் தற்போது தனிமையில் இருந்தார். அவர் பெற்ற மகன். மகள் எல்லாம் வெளி நாட்டில் தஞ்சம் புகுந்தனர் . தொலைபேசியில் உறவாடுவதில் மட்டுமே அவர்களுக்கு ஆர்வம் இருந்தது .

வார்த்தைகளை மட்டுமே வீடியோ வழியாக மாெழி பெயர்ந்தவர்கள் வாழ்க்கையை அன்பின் வழியே பரிமாற தவறிவிட்டார்கள். அதனால் பரிமளம் மனது முழுவதும் அழுதபடியே இருந்தது.

அவரின் கடைசி காலம் என்பது ரொம்பவும் கஷ்டமான காலமாக இருந்தது .

அதனால் அவருக்கு உணவு கொடுப்பதற்கு ஆன்லைன் .மருந்து மாத்திரை சாப்பிடுவதற்கு ஆன்லைன்’ அவரின் ஒவ்வொரு தேவைகளையும் ஆன்லைனில் புக் செய்து வாழ்ந்து வந்தார் . அதனால் பரிமளம் தான் பெற்ற பிள்ளைகளை விட மற்றவர்கள் மேல் தான் பாசமாக இருந்தார்.

ஊர் உறவு என்று சொல்வதற்கு யாரும் இல்லாத பரிமளம் படுத்த படுக்கையாக இருந்த போது அவருக்கு தெரிந்த நடைபாதை நண்பர்கள் . பூங்கா நண்பர்கள் மட்டும்தான் அவரின் கடைசி படுக்கையின் முன்னால் சுற்றி சுற்றி அமர்ந்து இருந்தார்கள்.

அவரைச் சுற்றி அமர்ந்திருந்த ஒரு பெரியவர் பரிமளத்தை வாய்விட்டு கூப்பிட்டார்.

பரிமளம்….. பரிமளம்….. இப்போ எப்படி இருக்கு? என்று அவர் கேட்க ஏதோ ஒரு வார்த்தை தன் செவிகளில் விழுவதை நினைத்த பரிமளம் கையை கையை ஆட்டி ஏதோ சைகை செய்தார்.

அவர் பேசுவதற்கு நான் எழவில்லை. கண்களில் மட்டும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. எதையோ சொல்ல வருகிறார். ஆனால் அவரால் அதைச் சொல்ல முடியாத நிலையில் இருந்தார். அதனால் நண்பர்கள் எல்லாம் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அமைதியாக இருந்தார்கள்.

அவ்வப்போது செல்போன் வழியாக அப்பாவை நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள் வெளிநாட்டில் பணம் சம்பாதிக்கும் பிள்ளைகள்.

பரிமளம் படுக்கையைச் சரி செய்த ஒரு நண்பர் அதில் ஒரு காகிதம் இருப்பதை எடுத்துப் பார்த்தார். அதைப் பிரித்துப் பார்த்த போது அவரின் கண்கள் திறந்து கொண்டன. பரிமளம் தான் சந்திக்க விரும்பும் நபர்கள் யார் யார் என்பதை விலாவாரியாக எழுதி வைத்திருந்தார்.

தன் பசிக்கு உணவு கொடுத்தவர். தன் தாகத்திற்கு தண்ணீர் கொடுத்தவர். தன் துணிகளை துவைத்து கொடுத்தவர். தன் பூங்கா நண்பர்கள். நடைபாதை நண்பர்கள் இவர்களை எல்லாம் தான் தான் கடைசி காலத்தில் சந்திக்க விரும்புவதாக அந்தக் காகிதத்தில் எழுதி வைத்திருந்தார் பரிமளம்.

இதையெல்லாம் வாசித்துப் பார்த்த நண்பர் ரொம்பவே கண்கலங்கினார்.

இந்தா பார்த்தீங்களா ? எதை எழுதி வச்சிருக்காருனு. அவருடைய கடைசி காலத்தில் தான் பெற்ற பிள்ளைகளை எழுதி வைக்கலையே? அவர் சொந்த பந்தங்கள் எழுதி வைக்கலையே ? எல்லாம் கூட இருந்தவங்க. பழகுறவங்க .அவருக்கு உதவி செய்தவங்களை மட்டும் தான் எழுதி வச்சிருக்காரு என்ன கொடுமை? என்று அங்கிருப்பவர்கள் பேசிக்கொண்டார்கள்.

அவர்கள், ‘‘பரமளம் ஐயா சரியாக எழுதி வைத்திருக்கிறார். எந்த பிள்ளையும் அவர் பக்கத்தில் இல்லையே? ஆன்லைன்ல வாங்கி சாப்பிட்டார். ஆன்லைன்ல மாத்திரை மருந்து வாங்கி உடம்பை பார்த்துக்கொண்டார். அவருக்கு உதவியாக இருக்கற எல்லாருமே அவருக்கு உறவுக்கு அப்பாற்பட்டவங்க. அவங்கதான் அவருக்கு உதவி செய்து வருக்கிறார்கள்.

அதனாலதான் அவர் மனசு அவங்கவங்க பக்கம் சாய்ந்திருக்கு.

மனித நேய உயர்வுள்ள உறவுகள்.

பெத்த பிள்ளைகளை சொந்தங்களைக் கூட அவர் எழுதி வைக்கல. அவங்க உணர்ச்சியற்ற உறவுகள். அவர் உள்ளம் எப்படி இருந்திருக்கும் பாருங்க.? என்று அங்கு கூடி அமர்ந்து அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

ஒருவரை அழைத்தார். செய்கையில் ஏதொ சொன்னார்.

இந்தா வர்றேன் என்று ஒரு பெரியவர் அவரின் படுக்கை அறையில் இருந்து எழுந்து போனார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் பரிமளம் சந்திக்க ஆசைப்பட்ட எல்லாரையும் அழைத்து வந்தார்.

ஒவ்வொருத்தராக பரிமளத்திற்கு முன்நிறுத்தி அறிமுகப்படுத்தினார். அவர்களிடம் செய்கையில் ஏதோ சொல்லிச் சொல்லி கண்களில் நீர் வழிய வழிய அவர்கள் தலையை தடவிக் கொடுத்தார் பரிமளம்.

இன்னொரு பக்கம் செல்போனில் அப்பா எப்படி இருக்கிறார்? என்று நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள் பிள்ளைகள்.

அது எதையும் பரிமளம் சட்டை செய்யவில்லை .

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஒரு நண்பர் .இப்போ இருக்கும் உறவுகளுக்கு உணர்ச்சிகள் இல்லை. பணம் இருந்தால் உறவுகள் பறந்து வரும். பணம் இல்லை என்றால் உறவுகள் பறந்துபோகும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

அங்கு கூடியிருந்த நண்பர் அவர் கடைசி காலத்தில் சந்திக்க ஆசைப்பட்ட அத்தனை நண்பர்களையும் ஏதேதோ தன் போக்கில் சொல்லிக் கொண்டிருந்தார்.

பரிமளம் ஐயா சந்திக்க ஆசைப்பட்ட அத்தனை நண்பர்களும் வந்து விட்டனர்.

அவர்களின் கையிலேயே…

அவர்களின் கையிலேயே…

பிரிந்தது பரிமளத்தின் உயிர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *